இந்தியாவுக்கு ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இந்திய இராணுவத் தளபதி மற்றும் கரையோர கடற்படைத் தளபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச் சந்திப்பில் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிப்பின் ராவ்த் மற்றும் இந்திய கரையோர கடற்படையின் பிரதானி ராஜேந்திர சிங் ஆகியோரை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது இரு தரப்பினருக்குமிடையில் சுமுகமான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவுகள் குறித்த சிந்தனைகளையும்  இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவுகள் குறித்தும் பேச்சுவார்ததை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் நினைவுப் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.