வெளிநாட்டிலுள்ள மனைவியுடன் தொலைபேசி உரையாடலில் முரண்பாடு : உயிரை மாய்த்த 2 பிள்ளைகளின் தந்தை

Published By: Vishnu

25 Jul, 2023 | 08:28 PM
image

இளம் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - நாவலடி எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மனைவி வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அண்மைக் காலமாக தொலைபேசி உரையாடல் மூலம் கணவன், மனைவிக்கிடையில் முரண்பாடு தோன்றியுள்ளது. 

இதன் தொடரிலேயே கணவன் தனது உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உயிரை விட்ட நபர் திருகோணமலை - கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஓட்டமாவடி - நாவலடி பகுதியில் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43