சிம்புவுக்கு உதவும் இசைப்புயல்

Published By: Robert

03 Jan, 2016 | 03:13 PM
image

பீப் பாடல் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ள சிம்புவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உதவி செய்துள்ளார்.

நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளிவரவுள்ள அனைத்து திரைப்படங்களும் பீப் பாடல் சர்ச்சையினால் தடைப்பட்டிருந்த நிலையில் இயக்குநர் கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு நடித்துக்கொண்டிருக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டீஸர் புத்தாண்டுக்கு தினத்தில் வெளியானால் நன்றாக இருக்கும் என்று பேசி வெளியிட வைத்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

மேலும், கெளதம் மேனனும் ரஹ்மானும் 'சிம்புவுக்கு பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது. இந் நேரத்தில் அந்தப் பையனுக்கு நாம் ஏதாவது பண்ண வேண்டும்' என்று பேசியிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், தெரிந்தோ தெரியாமலோ சிம்பு 'பீப்' இசை சர்ச்சையில் சிக்கிவிட்டார். அந்தப் பாடல் உருவாக்கத்தில் உள்ள தர்க்க ரீதியிலான சரியா தவறா விவாதங்களைத் தாண்டி, அவரால் அதிகாரபூர்வமாக அப்பாடல் வெளியிடப்படாமல் சிக்கல் ஏற்பட்டது. நம்முடன் பணிபுரியும் ஓர் இளம் கலைஞனுக்கு சமூகத்தில் தெரிந்தோ தெரியாமலோ மதிப்பில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில், அவர் குறித்த பார்வை மாற வேண்டும். அதற்கு, இப்போது டீஸர் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று ரஹ்மான்தான் கூறியுள்ளார்.

அத்துடன், "படத்தின் டீசரை உடனே முடித்துக் கொடுங்கள், நான் பின்னணி இசையை முடித்துக் கொடுத்துவிடுகிறேன்" என்று இயக்குநர் கௌதம் மேனனிடம் தெரிவித்திருக்கிறார் . அத்தோடு ஏ.ஆர்.ரஹ்மான். , தான் ஏற்கெனவே திட்டமிட்ட பணிகளை சற்றே தள்ளிவைத்துவிட்டு, சிம்புவின் டீசருக்கான இசைப் பணியை முடித்துத் கொடுக்கதுள்ளார். இருவருமே உடனடியாக டீசருக்கான வேலைகளை முடித்து அதை வெளியிட்டு இருக்கிறார்கள். இதேபோல், திரைப்படத்தின் முழு வேலைகளையும் முடித்து விரைவில் படத்தை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருவரும் இறங்கி இருக்கிறார்கள்.

பொதுவாக, ரஹ்மான் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பட டீஸர்களை ஷேர் செய்வது அரிது. ஆனால், 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டீஸர் வெளியானவுடன் முதலில் பகிர்ந்தவர் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபடும் ஆதித்யா...

2024-11-06 17:24:16
news-image

கமல்ஹாசன் 70

2024-11-06 17:13:05
news-image

இயக்குநர் ராஜுமுருகன் வழங்கும் 'பராரி' திரைப்படத்தின்...

2024-11-06 17:01:58
news-image

அடுத்த ஆண்டு பெப்ரவரியில் வெளியாகும் நடிகை...

2024-11-06 17:10:48
news-image

நடிகை ஓவியா நடிக்கும் 'சேவியர்' படத்தின்...

2024-11-06 16:23:09
news-image

நடிகர் நகுல் நடிக்கும் 'டார்க் ஹெவன்'...

2024-11-05 19:33:37
news-image

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்ற...

2024-11-05 17:27:31
news-image

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படத்தின்...

2024-11-05 17:12:39
news-image

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் 'ஜீப்ரா'...

2024-11-05 16:57:07
news-image

தீபாவளி வெளியீட்டில் வென்ற 'அமரன்'

2024-11-04 13:30:44
news-image

மாதவன் நடிக்கும் 'அதிர்ஷ்டசாலி' படத்தின் முதல்...

2024-11-04 13:32:05
news-image

ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' பிரமாண்ட...

2024-11-02 16:50:01