13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 22 ஆவது திருத்தத்தை புதிதாக கொண்டு வந்தால் இலங்கை படு பாதாளத்திற்குள் தள்ளப்படும் - சாள்ஸ் நிர்மலநாதன்

Published By: Vishnu

25 Jul, 2023 | 09:10 PM
image

13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கி  இலங்கையின் அரசியல் யாப்பில் 22 ஆவது யாப்பு மாற்றமாக புதிய சட்டத்தை கொண்டு வர இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில  கூறிய கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அவரது கருத்தை எதிர்க்கிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். இலங்கையில் நடைமுறையில் இருக்கும் என்று  சொல்லப்படுகின்ற 13 வது திருத்தச்சட்டத்தை முற்று முழுதாக நீக்கி  இலங்கையின் அரசியல் யாப்பில் 22ஆவது யாப்பு மாற்றமாக புதிய சட்டத்தை கொண்டு வர இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியிருக்கிறார்.

அப்படி ஒரு என்னப்பாட்டுக்கு அவர்கள் வருவார்களாக இருந்தால் அது முற்று முழுதாக இலங்கை படு பாதாளத்திற்கு தள்ளப் படுகின்ற ஒரு நிலமையாகத் தான் இருக்கும்.

தமிழர்கள் இயக்கங்கள், நாகர்களாக இலங்கையினுடைய தேசிய இனமாக பூர்வீக குடிகளாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கு உரித்து இருக்கிறது. வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்களினுடைய எண்ணக் கருக்களுக்கு அமைவாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவோ, கருத்துக் கணிப்பு ஊடாகவும் அவர்கள் விரும்புகிற ஆட்சி முறையில் இருக்கும் உரித்து அவர்களுக்கு இருக்கிறது.

13 ஆவது திருத்தச் சட்டம்  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது கூட முற்று முழுதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எங்களைப் பொறுத்த வரையில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக தமிழர்களுக்கு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறை முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.

ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் போது அது தமிழர்களுக்கு தீர்வாக அமையாது.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வின் கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அவரது கருத்தை எதிர்க்கிறேன்.என தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதியின் இந்திய விஜயம் அதன் பின்னணி, குருந்தூர் மலை விவகாரம் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55