இப்போதெல்லாம் மக்கள், தங்களின் வயது உயரம் இதற்கேற்ற வகையில் உடல் எடையை குறைக்கவேண்டும் என்றோ அல்லது உடல் எடையை பராமரிக்கவேண்டும் என்றோ அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஆனால் உடல் எடையை குறைப்பதற்கும், தொப்பையை குறைப்பதற்கும் அதாவது அடிவயிற்றுபருமனைக் குறைப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை உணர்வதில்லை. ஏனெனில் அடிவயிற்று பருமன் தான் அதாவது தொப்பை தான் ஒருவருக்கு நீரிழிவு வியாதியையும், ஹார்ட் அட்டாக்கையும் அழைத்து வருகிறது. அதனால் உடல் எடையை குறைப்பவர்கள், அதில் தங்களின் அடிவயிற்று பருமனையும் அதாவது தொப்பையும் முதலில் குறைக்கவேண்டும்.

ஆண்களின் இடுப்பளவு 90செ. மீ அளவிற்கும், பெண்களின் இடுப்பளவு 80 செ,மீ அளவிற்கும் உள்ளே தான் இருக்கவேண்டும்.இதற்கு மேல் சென்றால் அவர்கள் அடிவயிற்று பருமன் பிரச்சினைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். அதே போல் ஆண்களுக்கு 18 வயது வரையிலும், பெண்களுக்கு 16 வயது வரையிலும் தான் கல்லீரல், மண்ணீரல் அல்லது சிறுநீரகம் ஆகியவற்றின் வளர்ச்சியிருக்கும். இதற்கு பின் இவற்றின் வளர்ச்சி இருக்காது. அதனால் இத்தகைய காலகட்டத்திற்குள் நீங்கள் எது சாப்பிட்டாலும் அவை ஜீரணமாகிவிடுவதற்கு அதற்கு வாய்ப்புண்டு. ஆனால் இதற்கு பிந்தைய காலகட்டங்களில் நீங்கள் சாப்பிடும் வெள்ளை மைதா, வெள்ளை அரிசி, வெள்ளைச் சர்க்கரை ஆகியவை உரியமுறையில் ஜீரணிக்கப்படாமல் ஆபத்து தரக்கூடிய கொழுப்பாக மாறி கல்லீரலில் தங்கிவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் பேட்டிலிவர் என்று குறிப்பிடுகிறார்கள். இது தான் அடிவயிற்று பருமனுக்கு முக்கிய காரணமாகத் திகழ்கிறது.  இதன் செயல்பாட்டினால் தான் இன்சுலீன் சுரப்பதிலும் சீரற்ற தன்மை உருவாகிறது. அத்துடன் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் படியும் கொழுப்பாகவும் இது மாறுகிறது.அதனால் இதயத்திற்கு பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை ஏற்படுகிறது. 

எனவே இவற்றை தவிர்ப்போம். வாழ்க்கை நடைமுறையையும், ஆரோக்கியமான உணவு வகை மற்றும் உணவு பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வோம். வளமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.