வீட்டுக்குள் பிரவேசித்து குளியலறையில் இருந்த பெண்ணொருவரை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டுக் காவலர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முக்கிய பிரமுகர் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தராக இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுவரும் நிலையில், அருகில் உள்ள காணிக்குள் இரகசியமாக பிரவேசித்து, அக் காணியில் உள்ள வீட்டின் குளியலறையில் இருந்த பெண்ணை கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் கையடக்கத்தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM