பிரபல சமூக ஊடகமான டுவிட்டர் தளத்தின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
இந்நிலையில், எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தின் வர்த்தக குறியீடாக இருந்த நீலக்குருவி லோகோவை தற்போது ‘எக்ஸ்’ (X) என மாற்றியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை டுவிட்டர் தளத்தின் லோகோவாக மஸ்க் மாற்றி இருந்தார். பின்னர் மீண்டும் நீலக் குருவியாக அதனை மாற்றினார்.
இந்தச் சூழலில் டுவிட்டரின் லோகோவை நிரந்தரமாக மாற்ற மஸ்க் முடிவு செய்தார்.
அது குறித்து டுவீட்டும் செய்திருந்தார். நீலக் குருவிக்கு விடை கொடுப்போம் எனவும் அதில் சொல்லி இருந்தார். இது விரைவில் நடக்கும் என தெரிவித்திருந்த சூழலில் தற்போது லோகோவை ‘X’ என மாற்றியுள்ளார்.
வரும் நாட்களில் டுவிட்டரின் (twitter.com) டொமைனை x.com என மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதன் கீழ் மஸ்க் உரிமையாளராக உள்ள X கார்ப்பரேஷன் நிறுவன சேவைகளை பயனர்கள் பெறமுடியும் என தெரிகிறது. குறிப்பாக நிதி சார்ந்த சேவைகளும் இதில் இருக்கும் எனத் தெரிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM