(நெவில் அன்தனி)
மொரகஸ்முல்ல கழகத்திற்கு எதிராக சிட்டி லீக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மிகவும் பரபரப்பான நீக்கல் போட்டியில் 4 - 3 என்ற பெனல்டி முறையில் மாளிகாவத்தை யூத் கழகம் வெற்றிபெற்றது.
இதன் மூலம் சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்தின் இரண்டாவது தகுதிகாண் (அரை இறுதி) போட்டியில் ஜாவா லேன் கழகத்தை மாளிகாவத்தை யூத் கழகம் எதிர்த்தாடவுள்ளது.
ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற மொரகஸ்முல்ல கழகத்திற்கும் மாளிகாவத்தை யூத் கழகத்திற்கும் இடையிலான நீக்கல் போட்டியில் இரண்டு அணிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோல் போட எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போயின.
போட்டியின்போது இரண்டு சந்தர்ப்பங்களில் மாளிகாவத்தை யூத்துக்கு பெனல்டிகள் வழங்கப்பட்டிருக்கவெண்டும் என அக் கழகத்தின் சார்பில் வாதிடப்பட்டது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் மொரகஸ்முல்ல கழகத்தின் பெனல்டி எல்லைக்குள் தமது வீரர்கள் விதிகளுக்கு முரணான வகையில் வீழ்த்தப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆனால், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவை பெனல்டி இல்லை என மத்தியஸ்தர் தீர்மானித்தார்.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் பெனல்டி மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த இரசிகர்கள் மத்தியஸ்தர் மற்றும் உதவி மத்தியஸ்தர் மீது வசை பாடியதுடன் சிலர் உதவி மத்தியஸ்தரை கைகளில் அகப்பட்ட பொருட்களால் தாக்கினர். இதன் காரணமாக சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.
ஏழு நிமிடங்களின் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது.
இறுதியில் கோல்கள் எதுவும் போடப்படாமல் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்க மத்தியஸ்தர் பெனல்டி முறையை அமுல்படுத்தினார். அதில் 4 - 3 என்ற பெனல்டி முறையில் மாளிகாவத்தை யூத் வெற்றிபெற்றது.
இப் போட்டியில் ஆட்டநாயகன் விருது மாளிகாவத்தை யூத் வீரர் எம். ஆர். எம். ஷர்பானுக்கு வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM