திருகோணமலை, மகாதிவுல்வெல பகுதியில் இன்று காலை 9.30மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுமி உட்பட இருவர் படுகாயங்களுக்குள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் கணவன்,மனைவி இருவர் தனது பிள்ளையுடன் பயணித்துக்கொண்டிருந்த போது,வேகக்கட்டுபாட்டையிழந்து, பாதையில் சறுக்கி விழுந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மொரவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் படுகாயங்களுக்குள்ளான மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.