ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் ஜோதிட கணிப்புக்களை வெளியிட்ட பிரபல ஜோதிடரான விஜித் ரோஹன விஜயமுனி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஜனவரி 26 இல் மரணிப்பார், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவார் மற்றும் கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாவார் என்று ஆருடம் கூறிய காணொளி ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த நிலையில், இவர் நேற்று குற்றபுலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.