(நெவில் அன்தனி)
போர்ட் ஒவ் ஸ்பெய்ன், ட்ரினிடாடில் நடைபெற்றுவரும் 2 ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 365 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் மேற்கிந்தியத் தீவுகள் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அணித் தலைவர் க்ரெய்க் ப்றத்வெய்ட் (28), கேர்க் மெக்கென்ஸி (0) ஆகிய இருவரே ஆட்டம் இழந்துள்ளனர்.
டேஜ்நரேன் சந்தர்போல் 24 ஓட்டங்களுடனும் ஜேர்மெய்ன் ப்ளக்வூட் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருக்கின்றனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதமிருக்க இன்னும் 289 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் பின்னிலையில் இருக்கிறது.
மேற்கிந்தியத் தீவுகள் கடைசி நாளான திங்கட்கிழமை (24) பொறுப்புடன் துடுப்பெடுத்தாடினால் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொள்ள அல்லது வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.
ஆனால், நெருக்கடிக்கு மத்தியில் மேற்கிந்தியத் தீவுகள் கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்வதால் இந்தியாவுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியின் 4ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் கடைசி 5 விக்கெட்களை 26 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்து 255 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
37 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த அலிக் அதானேஸ் அதே எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தார். ஜேசன் ஹோல்டர் தனது எண்ணிக்கைக்கு 4 ஓட்டங்களை சேர்த்த நிலையில் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஏனையவர்கள் ஒன்றை இலக்கங்களுடன் ஆட்டம் இழந்தனர்.
பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 5 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா, முக்கேஷ் குமார் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து தனது 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, போட்டியில் ஒரு முடிவை காணும் பொருட்டு வேகமாக ஓட்டங்களைக் குவித்து 2 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
ரோஹித் ஷர்மாவும் யஷஸ்வி ஜய்ஸ்வாலும் 71 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து ஷுப்மான் கில், இஷாந்த் கிஷான் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 68 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
எண்ணிக்கை சுருக்கம்
இந்தியா 1ஆவது இன்: 438 (விராத் கோஹ்லி 121, ரோஹித் ஷர்மா 80, ரவிந்த்ர ஜடேஜா 61, யஷஸ்வி ஜய்ஸ்வால் 57, ரவீந்த்திரன் அஷ்வின் 56, ஜொமெல் வொரிக்கன் 89 - 3 விக்., கெமர் ரோச் 104 - 3 விக்., ஜேசன் ஹோல்டர் 57 ய- 2 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: 255 (க்ரெய்க் ப்றத்வெய்ட் 75, அலிக் அதானேஸ் 37, டேஜ்நரேன் சந்தர்போல் 33, கேர்க் மெக்கென்ஸி 32, மொஹமத் சிராஜ் 60 - 5 விக்., ரவிந்த்ர ஜடேஜா 37 - 2 விக்., முக்கேஷ் குமார் 48 - 2 விக்.)
இந்தியா 2ஆவது இன்: 181 - 2 விக். டிக்ளயார்ட் (ரோஹித் ஷர்மா 57, இஷான் கிஷான் 52 ஆ.இ., யஷஸ்வி ஜய்ஸ்வால் 38, ஷுப்மான் கில் 29 ஆ.இ.)
மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 365) 76 - 2 விக். (க்ரெய்க் ப்றத்வெய்ட் 28, டேஜ்நரேன் சந்தர்போல் 24 ஆ.இ., ஜெர்மெய்ன் ப்ளக்வூட் 20 ஆ.இ., ரவிச்சந்திரன் அஷ்வின் 33 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM