டுவிட்டர் நிறுவனத்தின் பெயரை 'எக்ஸ்' என்று மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். தற்போது X.COM என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய லோகோ வெளியிடப்படவுள்ளது.
எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதன் ஊழியர்கள் பலரை வேலையை விட்டு நீக்கினார்.
இந்நிலையில், திடீரென டுவிட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. அதன்பின் பதிவுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் டுவிட்டரின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக, லிண்டா யாக்காரினோவை நியமித்தார். அப்போது அவர் டுவிட்டரை ‘எக்ஸ்’ நிறுவனமாக மாற்றும் திட்டம் பற்றி குறிப்பிட்டார்.
அதாவது டுவிட்டர், சமூகவலைதளம், மெசேஜிங், பணப் பரிவர்த்தனை என அனைத்து செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையிலான செயலியாக மாறும்.
எல்லா சேவைகளை அளிக்கும் இடமாக இது இருக்கும். ஏஐ மூலம் இது செயல்படும். எக்ஸ் நம்மை எல்லாம் இணைக்க போகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில், "டுவிட்டர் தளம் மீண்டும் சீரமைக்கப்படும் என்றும், டுவிட்டர் லோகோவிற்கு விரைவில் விடைக் கொடுக்கலாம் என்றும், இன்றிரவு (நேற்று) எக்ஸ் லோகோ வெளியிடப்பட்டு, நாளை (இன்று) உலகம் முழுவதும் நேரலைக்கு அனுப்புவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டுவிட்டரின் லோகாவை மாற்ற இருப்பதாகவும் டுவிட்டரின் பிராண்டை சீரமைப்பு செய்ய இருப்பதாகவும் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM