இன்று காலை சேவையிலீடுபடவிருந்த 11 ரயில் சேவைகள் இரத்து

24 Jul, 2023 | 09:07 AM
image

புகையிரத சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று (24) காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 ரயில் சேவைகள் இரத்தாகியுள்ளன.

இதனால் ஏனைய ரயில் சேவைகள் தாமதமாகும் சாத்தியம் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரம்புக்கனைக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெயங்கொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் குறித்த ரயில் இடை நிறுத்தப்பட்டுள்ளதால் பிரதான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புகையிரத சாரதிகள் பணி புறக்கணிப்பால் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை 6.40 மணிமுதல் இரவு 09 மணிவரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் 12 பயணிகள் புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்ததாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் பிரச்சினையினை முன்னிறுத்தி ரயில் சாரதிகளால் இவ்வாறு தொழில் சங்க  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை...

2024-03-03 14:46:29