மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் என்ரே ரஸலுக்கு ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ்டனில் உள்ள தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனை குழுவுக்கு தனது இருப்பிடம் தொடர்பான தகவலை தெரிவிக்காத குற்றச்சாட்டுக்காக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊக்கமருந்து சோதனை குழு கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக பலமுறை அவரை தொடர்புக்கொண்டு அவரது இருப்பிடம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போதும் ரொஸல் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரொஸல் எதிர்வரும் வருடம் ஜனவரி 30 ஆம் திகதிவரை கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனை குழு திடீர் என ஊக்கமருந்து சோதனைகளை மேற்கொள்வதால், கிரிக்கெட்டில் ஊக்கருந்து பாவனை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.