காணாமல் போனதாக கூறப்பட்ட டெலிக்கொம் நிறுவனத்தின் மனித வள (மேன்பவர்) ஊழியர்கள் சங்கத்தின் உதவித் தலைவர் எம்.எஸ். மங்கள இன்று காலை களுத்துறை இங்கிரிய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு  கோட்டையில் உள்ள  டெலிகொம் நிறுவனத்துக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டவர் கடந்த சனியன்று (28) நள்ளிரவில் வீட்டுக்கு வருவதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியதாகவும் எனினும் அவர் வீடு வந்து சேரவில்லை எனவும் அவரது மனைவி பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை செய்திருந்தார்.

இதேவேளை, தமது சங்கத்தின் உப தலைவர் பன்னிப்பிடியவிலுள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே, அவர் காணாமல் போனதாக அனைத்து இலங்கை தொலைத் தொடர்பு சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமந்த விஜேசூரிய தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் காணாமல் போன நபரை இங்கிரிய பகுதியில் இன்று கண்டு பிடித்துள்ளனர்.