ஆளுமையுள்ள தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் வேண்டும்

Published By: Vishnu

23 Jul, 2023 | 03:06 PM
image

எம்.எஸ்.தீன்

இலங்­கையின் பொரு­ளா­தாரம் மிகவும் மோச­மான நிலையை அடைந்­துள்ள இன்­றைய நிலையில் கூட, இனப் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வுகள் குறித்து நாளாந்தம் கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டு­ வருகின்­றன.

தமிழர் தரப்பில் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்­டு­மென்று ஒரு தரப்­பி­னரும், 13இல் உள்­ளதை விடவும் கூடிய அதி­கா­ரங்கள் மாகாண சபை­க­ளுக்கு வழங்க வேண்­டு­மென்று இன்­னு­மொரு தரப்­பி­னரும், சமஷ்டி முறைமை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்று மற்றொரு தரப்பினரும்  கருத்­துக்­களை முன் வைத்து வரு­கின்­றனர். 

அதே வேளை எல்லாத் தரப்­பி­னரும் வடக்கும், கிழக்கும் இணைந்­தி­ருக்க வேண்­டு­மென்றே தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். இக்­க­ருத்­துக்­களின் மூல­மாக தமி­ழர்கள் மத்­தியில் பல அர­சியல் கட்­சி­களும், அவற்­றி­டையே கருத்து முரண்­பா­டு­களும் உள்ள போதிலும் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு முன் வைக்­கப்­பட வேண்டும்.

அதில் வடக்கு, கிழக்கு தமி­ழர்­க­ளுக்கு அர­சியல் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்­டு­மென்தில் உறு­தி­யாக இருக்­கி­றார்கள் என்­பது தெளி­வா­கின்­றது.  ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் வடக்கு, கிழக்கு தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்திக் கொண்­டி­ருக்­கிறார்.

இதே­வேளை, மலை­யகத் தமி­ழ் பிரதிநிதி களும் தங்­களின் இருப்பு, குடி­யி­ருப்பு மற்றும் காணிப் பிரச்­சி­னைகள், சம்­பளப் பிரச்­சி­னைகள் உட்­பட அர­சியல் அதி­கா­ரங்கள் குறித்தும் பாரா­ளு­மன்­றத்­திலும், ஊட­கங்­க­ளிலும், ஆட்­சி­யா­ளர்­க­ளு­டனும் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

சிங்­களத் தலை­வர்­களில் பலரும் பௌத்த  சிங்­கள மக்­களின் எதிர்­காலம் குறித்தும், ஆட்­சி­யா­ளர்­களின் கொள்­கைகள் பற்­றியும், இது பௌத்த நாடு. இதனைப் பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மென்றும், இலங்கை பௌத்­தர்­க­ளுக்கு மாத்­திரம் உரித்­தான நாடு என்றும் பல கருத்­துக்­களை முன் வைக்­கின்­றனர்.

இவ்­வாறு வடக்கு, கிழக்கு, மலை­யகத் தமி­ழ் பிரதிநிதிகளும், சிங்­க­ள­ப் பிரதிநிதிகளும் தமது உரி­மைகள், அர­சியல் அதி­கா­ரங்கள் பற்­றி­யெல்லாம் பேசும் இன்­றைய நிலையில் முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்லிம் சமூ­கத்தின் இருப்பு, வாழ்­விடம், எதிர்­காலம் குறித்தோ, இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வில் முஸ்­லிம்­க­ளுக்கு எத்­த­கைய அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்­டு­மென்­பது குறித்தோ எத­னையும் பேசா­துள்­ளார்கள். இவர்­களின் இந்த மௌன­நிலை முஸ்­லிம்­க­ளுக்கு எந்தப் பிரச்­சி­னை­களும் கிடை­யா­தென்ற அர்த்­தத்தை கொடுத்­து­விடும்.

ஆதலால் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் குறித்து முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்த வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தின் குர­லாக செயற்­பட தைரி­ய­மில்­லா­த­வர்கள் முஸ்லிம் அர­சி­ய­லி­ருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

தாங்­களே முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­வர்கள், மக்கள் பிர­தி­நி­திகள் என்று வெறு­மனே சொல்லிக் கொண்­டி­ருக்கும் நிலைப்­பாட்டை முஸ்­லிம்கள் தொடர்ந்தும் அங்­கீக­ரித்துக் கொண்­டி­ருப்­பார்­க­ளாயின் அர­சியல் அதி­கா­ர­மற்ற ஓர் இன­மாக முஸ்­லிம்கள் இருக்க வேண்­டி­யேற்­படும்.

எடுப்பார் கைப்­பிள்ளை போன்­றுள்ள இன்­றைய முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தொடர்ந்தும்  முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­திகள் என்­றி­ருப்­பார்­க­ளாயின் மேற்­சொன்ன நிலையை முஸ்­லிம்கள் விரைவில் அடைந்­து ­வி­டு­வார்கள். சமூ­கத்தின் மீது அக்­க­றை­யில்­லா­த­வர்­க­ளா­கவும், ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு மாத்­திரம் விசு­வாசம் காட்­டு­கின்­ற­வர்­க­ளா­கவும் முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­திகள் உள்ளனர்.

இவர்­க­ளினால் முஸ்லிம் சமூகம் சகல விதத்­திலும் தேய்­வ­டைந்து கொண்­டி­ருக்­கின்­றது. அதே வேளை, அவர்­களும், அவர்­களின் குடும்­பமும் பொரு­ளா­தா­ரத்திலுள்ள சுக போகங்களிலும்  வளர்ந்து கொண்­டி­ருப்­பதை முஸ்­லிம்கள் அவ­தா­னிக்க வேண்டும். இவர்­களின் இந்த வளர்ச்­சிக்கு முஸ்­லிம்­களின் உரி­மைகள் தாரை­வார்க்­கப்­பட்­டுள்ளன என்ற  உண்­மையை முஸ்­லிம்கள் விளங்கிக் கொள்­ளாமல் இருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.

முஸ்­லிம்­க­ளுக்கு அர­சியல் அதி­கா­ரங்கள் உள்­ளிட்ட ஆயி­ரத்­தெட்டுப் பிரச்­சி­னைகள் உள்­ளன. காணிப் பிரச்­சினை, மீள்­கு­டி­யேற்றப் பிரச்­சினை, காணாமல் போன­வர்­களின் பிரச்­சினை, ஆயுதப் போராட்ட காலங்­களில் கொலை செய்­யப்­பட்­ட­வர்கள், அவ்­வாறு கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் புதை குழி­களை அடை­யாளங் காண வேண்­டிய பிரச்­சினை, அரச உயர் பத­வி­களில் புறக்­க­ணிப்பு, மத­வி­ழுமி­யங்­களை பின்­பற்­று­வதில் உள்ள பிரச்­சினை என பல பிரச்­சி­னைகள் உள்ள போதிலும் அவை குறித்து அர­சியல் தலை­வர்கள் மாத்­தி­ர­மன்றி ஏனைய துறைத் தலை­வர்­களும் குருடர், செவிடர் போன்றே உள்ளனர்.

இலங்கை இரா­ணு­வத்­திற்கும், தமிழ் ஆயுதக் குழுக்­க­ளுக்கும் இடையே யுத்தம் நடை­பெற்ற காலத்­திலும் முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்­டார்கள். பல இழப்­புக்­களை சந்­தித்­தார்கள். யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் முஸ்­லிம்கள் வர­லாற்றில் என்றும் அனு­ப­வித்­தி­ராத பல துன்­பங்­க­ளையும், இழப்­புக்­க­ளையும் சந்­தித்­துள்­ளார்கள். ஆட்சி அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே முஸ்­லிம்­களின் மீது பொய்க் குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்­தார்கள்.

இத்­த­கை­ய­வர்­க­ளுடன் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் எனக்கூறிக்கொள்பவர்கள்  இறுக்­க­மான இணைப்பைக் கொண்­டி­ருந்­தார்கள். அமைச்சுப் பத­வி­க­ளையும் பெற்­றார்கள்.

இது போதா­தென்று ஏப்ரல் குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்கள் இன்னும் மோசமாக  நசுக்­கப்­பட்­டார்கள்.  

இதன் பின்னர் கூட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் அன்பு செலுத்தி அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொண்­டார்கள். முஸ்லிம் சமூ­கத்தை பாது­காத்துக் கொள்­வ­தற்­கா­கத்தான் அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொண்டோம் என்று நா கூசாமல் சொல்லிக் கொண்­டார்கள். 

ஆயினும் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களை பாது­காத்துக் கொள்ள முடி­ய­வில்லை. மறு­பு­றத்தில் முஸ்­லிம்­களில் ஒரு சாரார் அமைச்சுப் பத­வி­களைப் பெற்­ற­வர்­க­ளுக்கு வர­வேற்பு அளித்­தார்கள். அமைச்சர் பத­விகள் மூல­மாக இன்பம் காணும் சமூ­க­மாக முஸ்லிம் இருப்­பது வெட்­கத்­துக்­கு­ரி­ய­தாகும்.

முஸ்லிம் பாட­சா­லை­களை எடுத்துக் கொண்டால் பல்­வேறு வளப்­பற்­றாக்­குறைகள்  காணப்­ப­டு­கின்­றன. ஆசி­ரியர் பற்­றாக்­குறை, ஆசி­ரியர் இட­மாற்­றங்­களின் போது ஆசி­ரியர் வளம் சரி­யாக பகி­ரப்­ப­டாமை, கல்வி அதி­கா­ரிகள் பிர­தேச ரீதி­யாக முன்­னு­ரிமை கொடுத்து செயற்­படல், தகு­தி­யற்­ற­வர்­க­ளுக்கு பதவி உயர்வும், பத­வி­களும் வழங்­கப்­படல், தள­படக் குறை­பா­டுகள், வகுப்­பறைக் கட்­டிடக் குறை­பாடு என்று பல குறை­பா­டு­க­ளுடன் இயங்கிக் கொண்­டி­ருப்­ப­தை­யிட்டு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் பேசு­வ­தே­யில்லை. 

தங்­களின் கொந்­த­ராத்­துக்­களை செய்­வ­தற்கு அரசாங்கத்தின்  ஒப்­புதல் வேண்­டு­மென்­ப­தற்­காக அதி­கா­ரி­களின் பொருத்­த­மற்ற நட­வ­டிக்­கை­களை கண்டும் காணாதும் போன்­றுள்­ளார்கள். 

இவ்­வி­த­மாக முஸ்­லிம்­களின் கல்வி இருக்­கின்ற போது எவ்­வாறு முஸ்­லிம்­க­ளினால் கல்­வித்­து­றையில் சாதிக்க முடியும். அர­சாங்­கத்­திற்கு வழங்கிக் கொண்­டி­ருக்­கின்ற ஆத­ர­வுக்­காக பெற்றுக் கொள்ளும் நிதி ஒதுக்­கீ­டு­களை வீதி­களை அமைப்­ப­தற்கே ஒதுக்­கீடு செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனால் முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­தி­களை சூழ கொந்­த­ராத்­துக்­கா­ரர்­களே உள்­ளார்கள். பாட­சா­லைகள் குறை­பா­டு­க­ளினால் அல்லாடிக் கொண்­டி­ருக்­கின்­றன.

மதத் தலை­வர்­களை எடுத்துக் கொண்டால் இவர்­க­ளுக்கு சமூ­கத்தில் மிகப் பெரிய செல்­வாக்கு இருக்­கின்ற போதிலும் அவர்கள் மத போத­னை­க­ளுடன் மாத்­திரம் தமது பணியை சுருக்கிக் கொண்­டுள்­ளார்கள். அர­சி­யல்­வா­தி­களை வழி நடத்தும் பொறுப்பும் இவர்­களை சார்ந்­த­தாகும். ஆனால், இவர்­களில்  பலர் அர­சி­யல்­வா­தி­களின் பொருத்­த­மற்ற செயற்­பா­டு­களை அங்­கீ­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்­லிம்­களின் கல்வி, அர­சியல், பொரு­ளா­தாரம் பின்­ன­டை­வு­களைக் கண்டு கொண்­டி­ருப்­ப­தற்கு அர­சி­யல்­வா­திகள் கூடிய பொறுப்பைக் கொண்­டி­ருந்­தாலும், ஏனைய துறைத் தலை­வர்­களும் அதற்கு பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்­க­ளாகின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் உள்­ளிட்ட முஸ்லிம் கட்­சி­களின் கொள்கை மற்றும் தலை­வர்­க­ளுடன் ஏற்­பட்ட முரண்­பா­டுகள் கார­ண­மாக கட்­சியை விட்டுப் பிரிந்­த­வர்கள், விலக்­கப்­பட்­ட­வர்கள் முஸ்லிம் கட்­சி­க­ளையும், அதன் தலை­வர்­க­ளையும் மிக மோச­மாக விமர்­சனம் செய்­தார்கள்.

தாங்­கள்தான் சமூ­கத்தின் மீது அக்­க­றை­யு­டை­ய­வர்கள் என்றும் தெரி­வித்தார்கள். பொதுக் கூட்­டங்­களை நடத்­தி­னார்கள், தேர்­தல்­களில் போட்­டி­யிட்­டார்கள். இத்­த­கை­ய­வர்கள் கூட தற்­போது முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் போன்று சமூ­கத்­திற்­காக குரல் கொடுக்­காது ஒதுங்­கிக் கொண்டுள்ளனர். 

முஸ்­லிம்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னைகள் குறித்து நாம் பேசினால் இன­வா­தி­க­ளி­னதும், ஆட்­சி­யா­ளர்­க­ளி­னதும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள நேரிடும் என்ற அச்சம் முஸ்லிம் அரசியல் மற்றும் மதத் தலைவர்களிடையே காணப்படுகின்றது. அச்சமின்றி செயற்படுவது ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்றாகும்.

முஸ்லிம் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை எடுத்துக் கொண்டால் அவர்களிடம் தலைவர்களுக்குரிய  பண்புகள் இல்லை.   

பொய்யும், புரட்டும், போலியான உரிமைக் கோஷமும்தான் இவர்களிடம் மலிந்து கிடக்கின்றன. இந் நிலை  மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் சமூகத்திற்குரிய உண்மையான அரசியல் தலைவர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும், அரசியல் கட்சிகளையும் அடையாளங் காணலாம்.

ஆளுமையுள்ளவர்களை தலைவர்களாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் தெரிவு செய்யும் வல்லமை மக்களிடம்தான் உள்ளது. எந்த சமூகம் இதனை சரியாகச் செய்யுமோ அந்த சமூகம் சிறுபான்மைச் சமுகமாக  இருந்தாலும் ஆளும் வர்க்கத்தையே ஆளும் சமூகமாக இருக்கும். இதற்கு உலகில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆர்க்டிக் மீதான அதிகாரப் போட்டி :...

2026-01-20 14:39:35
news-image

கறுப்பு ஜனவரி'யில் இனியும் இருள் சூழாதிருக்க

2026-01-20 09:11:57
news-image

அநுர குமாரவின் வடக்கு விஜயம் சொல்லும்...

2026-01-20 09:14:02
news-image

இலங்கைக்கு  அமெரிக்கா மேலதிக 25 வீத ...

2026-01-19 11:23:51
news-image

மலையக சமூகத்தை அந்நியப்படுத்தும் சொல்லாடல்களுக்கு முற்றுப்புள்ளி...

2026-01-19 11:01:00
news-image

எதிர்மறையை சாதகமாக்கிய ஜூலி சங்

2026-01-18 05:55:10
news-image

வெறுங்கையுடன் வந்த வாங் யி

2026-01-18 05:47:45
news-image

தமிழர்களை இலக்கு வைத்த பாலியல் வன்முறைகள்

2026-01-18 05:42:29
news-image

அர­சி­யல்­வா­திகள் பொய்­க்கூ­று­வதை சட்­ட­வி­ரோ­த­மாக்கும் முயற்­சியில் வேல்ஸ்

2026-01-18 05:39:45
news-image

சுவிசில் பெருந் துயராக மாறிய புத்தாண்டுக்...

2026-01-18 05:33:08
news-image

ஆய்வுக்கு உட்­ப­டுத்த வேண்­டிய அனர்த்த வரை­ப­டங்கள்

2026-01-18 05:29:35
news-image

தடம்புரண்ட சர்வதேச உறவு

2026-01-18 05:21:14