அம்பாறை - நிந்தவூர் மற்றும் மட்டக்களப்பு - கல்லடி பகுதிகளில் திருடப்பட்ட இரணடு பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சில பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அதன்படி, நிந்தவூரில் கடந்த 18ஆம் திகதி திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் 32 வயதுடைய ஒருவரையும், கல்லடியில் திருடப்பட்ட மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் காத்தான்குடி ஊர்வீதியில் 19 வயதுடைய மற்ற சந்தேக நபரையும் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, அந்த இருவரிடமிருந்து சுமார் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 மோட்டார் சைக்கிள்கள், 1 லெப்டொப், 1 டிவீடி இயந்திரம், வீடுகளில் கொள்ளையிடுவதற்காக பயன்படுத்தும் ஆயுதங்கள் அடங்கிய பையொன்று மற்றும் சிறிய கம்பித்துண்டு ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் ஆரையம்பதியையும் மற்றொருவர் காத்தான்குடியையும் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM