இந்தியா தொடர்ந்தும் இலங்கையைக் கண்காணிக்க வேண்டும் - சுரேஷ் வலியுறுத்தல்

22 Jul, 2023 | 08:14 PM
image

(நமது நிருபர்)

இந்தியப் பிரதமரினால் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளையும் இலங்கை மீதான இந்தியாவின் எதிர்பார்ப்பினையும் நம்பிக்கையையும் வரவேற்கும் அதேவேளை, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்பு என்ற ரீதியில் அவ்வொப்பந்தத்தின் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் , இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (21) தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது. 

இதன்போது அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி, தமிழ் மக்களின் அபிலாசைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரநாள் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த வியாழக்கிழமை (20) முதல்முறையாக இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பின்பேரில் டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 

ரணில் விக்கிரமசிங்க டெல்லி செல்வதற்கு முன்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக்கூட்டணியைச் சார்ந்த ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த்தேசியக்கட்சி, ஜனநாயகப் போராளிகள் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி. விக்கினேஸ்வரனும் கையெழுத்திட்ட ஒரு கடிதம் டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

 இந்தியாவின் பாதுகாப்பு என்பது இலங்கை தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தியுடன் பின்னிப்பிணைந்தது என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆகவே இந்திய அரசாங்கம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு தரப்பு என்ற அடிப்படையில், அவ்வொப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு முழுமையான தார்மீக உரிமை இருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

எமது கடிதத்தில் தெரிவித்திருந்ததைப் போன்றே இந்தியப் பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதிக்கு மேற்கண்ட விடயங்களைத் தெளிவாக எடுத்துரைத்திருந்தது மாத்திரமல்லாமல், இலங்கை தமிழ் மக்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு அவர்களது அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்படவேண்டும் . 

அதற்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடாத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன் அதனை இலங்கை அரசு செய்யும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையின் பாதுகாப்பு என்பவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது என்றும் இந்துமகா சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கும் அது முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன்,  வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கு இந்திய அரசு தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் அபிவிருத்தி மற்றும் அதற்கான உதவிகள் என்பவை கூட இலங்கை தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியப் பாதுகாப்புடன் ஒருமித்துப் போகின்ற ஒரு விடயம் என்பதை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கருதுவதைப் போன்றே இந்தியப் பிரதமரும் கருதியிருப்பதையிட்டு நாம் எமது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் இந்தியப் பிரதமருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலையிலும் அதில் அடங்கியுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலையிலேயே இந்தியாஇருக்கிறது என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக டெல்லியில் ஒப்புக்கொண்டாலும் மாறிமாறி ஆட்சி செய்யும் இலங்கை அரசாங்கங்கள் அதனை இழுத்தடித்து வருவதையே நாங்கள் பல காலமாகப் பார்த்து வருகிறோம். 

பல்வேறு காரணங்களைக் கூறி அதை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தப்பித்து வருவதையும் பார்த்திருக்கின்றோம்.

இந்த முறையும் அவ்வாறில்லாமல் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதாஎன்பதைக் கண்காணிப்பதற்கு இந்தியா ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன் குறிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் நாம் கோருகிறோம்.

மலையக தமிழ் மக்கள் இந்த மண்ணில் குடியேறி 200 வருடங்கள் முடிவடையும் இன்றைய காலகட்டத்தில் சரியான ஊதியமில்லாமல் வாழ்விடங்களில்லாமல் இன்னமும் லயன்களில் அடிமைகளாக வாழ்கின்ற சூழ்நிலையில், அவர்களுடைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 75 கோடி ரூபாய்களை வழங்குவது வரவேற்பிற்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும். 

மலையக மக்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் இந்தியா தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை ஜனாதிபதியும் தமிழ் மக்களுக்கும் இந்திய அரசுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை காலம் கடத்தாது முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. வெல்லாவெளியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின்...

2024-05-28 09:15:56
news-image

பசறையில் குளவி கொட்டுக்கு இலக்கான நபர்...

2024-05-28 09:05:45
news-image

இன்றைய வானிலை 

2024-05-28 07:07:30
news-image

இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு...

2024-05-28 06:11:06
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பாரிய...

2024-05-28 06:10:04
news-image

ஆகஸ்ட் மாதத்துக்குள் அரச நிறுவனங்களை தனியார்...

2024-05-28 06:09:07
news-image

அலி சப்ரி ரஹீமுக்கும் புத்தளம் பிரதேச...

2024-05-28 06:00:41
news-image

யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கிற்கு சமாதானத்தின்...

2024-05-28 02:35:28
news-image

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என...

2024-05-28 02:06:22
news-image

தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தால் ஆணையிட...

2024-05-27 18:31:24
news-image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இந்திய...

2024-05-27 22:16:56
news-image

உலகப் புகழ்பெற்ற வர்த்தக முதலீடுகளை ஈர்ப்பது...

2024-05-27 20:05:29