சட்டக்கல்லூரி அனுமதிக்கட்டணம் அதிகரித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் நீதி அமைச்சர் விஜயதாச

Published By: Vishnu

21 Jul, 2023 | 04:53 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தினால் சட்டக்கல்லூரி கல்வி நடவடிக்கைக்கு வழங்கப்படுவதில்லை. அதனால்தான் சட்டக்கல்லூரிக்கான அனுமதிக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி ஏற்படுகிறது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றோன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிவளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சஜித் பிரேதமாச குறிப்பிடுகையில், சட்டக்கல்லூரிக்கு அனுமதிப்பதற்காக 15ஆயிரம் ரூபா அறவிடப்படும் நிலையில், பரீட்சை கட்டணமாக 1200ரூபா அறவிடுவதன் மூலமும் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்னர் சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் கோரி இருப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். இது தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், புதிய வர்த்தமானி ஒழுங்குவிதிகள் பிரகாரம் சட்டக்கல்லூரி அனுமதிக் கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கட்டண அதிகரிப்பு மேற்கொள்வதற்கு முன்னர் சட்ட கல்வி கவுன்சிலுடன் நீண்டவகையில் கலந்துரையாடி, இது தொடர்பாக தேடிப்பார்த்தோம்.

சட்டக்கல்லூரியில் 5ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் சட்டக்கல்லூரியில் மேற்கொண்டு வருகிறது. ஆனால் சட்டக்கல்லூரிக்கு அரசாங்கத்தினால் எந்த நிதியும் வழங்குவதில்லை. சட்டக்கல்லூரிக்கு வேறு வருமான வழிகளும் இல்லை.

அதனால் மாணவர்களிடம் அறவிடப்படும் பணத்தில் இருந்தே ஒட்டுமொத்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரம் சட்டக்கல்லூரிக்கு தற்போது விண்ணப்பம் கோரி இருப்பது தொடர்பாக தேடிப்பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட...

2025-06-24 12:55:54
news-image

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை...

2025-06-24 12:59:38
news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38
news-image

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை...

2025-06-24 11:11:03
news-image

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும்...

2025-06-24 10:45:42
news-image

இ.தொ.கா.வின் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைத்...

2025-06-24 12:28:45