வியாபாரிகள் தங்களது வெற்றிக்காக கடைப்பிடிக்க வேண்டிய ரகசிய சூத்திரம்...?!

Published By: Ponmalar

21 Jul, 2023 | 03:52 PM
image

கல்வி கற்று அரசாங்க பணிகளை செய்வதற்கான வாய்ப்பு பெறாதவர்கள்... சுய தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்புபவர்கள்... தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டு, வாழ்க்கையை தொடர்ந்து நடத்த வேறு வழி இல்லாமல் வணிக நிறுவனத்தை அல்லது விற்பனை நிலையத்தை தொடங்கி இருப்பவர்கள்... என பலரும் தாங்கள் தொடங்கி இருக்கும் தொழில் அல்லது வியாபாரம் வெற்றி அடைய வேண்டும் என்று நாளாந்தம் இறைவனை பிரார்த்திப்பர்.

ஆனால் சிலருக்கு தொழிலில் சூட்சுமம் தெரிந்திருந்தும் மக்களின் வருகையின்மையால் நஷ்டத்தை எதிர்கொள்ள தொடங்குவர். சிலருக்கு லாபத்தின் பங்கு குறைய தொடங்கும்.

வேறு சிலர் வேறு வழி தெரியாமல் தொடர்ந்து நட்டத்தில் இயக்கி வருவர். இவர்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய எளிய வழிமுறையினை முன்மொழிந்திருக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமைகள் அல்லது பௌர்ணமி தினத்தன்று பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால் வெற்றிலை பாக்கு பாயாசம் கற்கண்டு பழங்கள் ஆகியவற்றை, உங்களது வணிகநிலையத்தில் இருக்கும் மகாலட்சுமி புகைப்படத்திற்கு முன் வைத்து வழிபட வேண்டும்.

இதன் போது விளக்கேற்றி 'ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே! உன் முழு உருவத்துடன் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்துடன் இத்தீபத்தில் எழுந்தருளி எம்முடைய நிதி தேவைகளை பூரணமாக பூர்த்தி செய்யும் அளவிற்கு வளமான வாழ்வை தந்த அருள வேண்டும்' என பிரார்த்தித்துக் கொண்டு தீபத்தை ஏற்றி வணங்க வேண்டும்.

பிறகு தீபம் குளிர்ந்ததும் அல்லது குளிர்விக்கப்பட்டதும் அந்த திரியில் இருக்கும் கருக்கை சிறிதளவு நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இது எதிர்பார்த்த பலனை தரும்.

இந்த கருக்கை நெற்றியில் வைக்கும் தருணத்தில் மனதில்,

'ஸ்ரீ சுக்ல மகாசுக்ல

நவாங்கே ஸ்ரீ மகாலட்சுமி

நமோ நமஹ'

என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொள்ள வேண்டும்.

இதனை நாளாந்தம் ஒருமுகமான மனதுடன் உச்சரிக்கும் போது, உங்களுடைய வணிக நிறுவனம் மற்றும் விற்பனை நிலையத்திற்கு நாலா திசைகளிலிருந்தும் ஜன வசியமும், தன வசியமும் ஏற்பட்டு,  உங்களுடைய வியாபாரமும், லாபமும் செழிக்கும்.

இந்த சூட்சமத்தை வட இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற பகுதியில் உள்ள வணிகர்கள் பின்பற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனை நாமும் பின்பற்றி வணிகத்தில் வெற்றி கண்டு லாபம் பெறுவோம்.

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-02-13 15:34:12
news-image

ஆரோக்கியம் மேம்படுவதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-02-12 17:06:58
news-image

தன வரவு தடையின்றி வருவதற்கான சூட்சம...

2025-02-11 16:22:28
news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19