பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் பிணை மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த பிணை மனுவினை தனது சட்டத்தரணியின் மூலமாக  உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக அறிவித்துள்ளார்.

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை  தொடர்பில், விமல் வீரவன்ச எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.