இலங்கை மற்றும் இந்திய கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான புதிய வழிமுறைகளை ஆராயும் விதத்திலும் இருநாட்டு கடற்படை நகர்வுகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பேச்சுவாரத்தையொன்றை இலங்கை -இந்திய கடற்படை தளபதிகள் நடத்தியுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் இந்தியாவில் பயிற்ச்சிகளை மேற்கொள்ளும் நடவடிகைகைகளையும் இந்த சந்திப்பின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜய குணரத்ன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள நிலையில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பாவை நேற்று சந்தித்திருந்தார்.

இலங்கை இந்திய கடற்படை நட்புறவை பலப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ள நிலையில் இரு நாட்டு கடற்படை தளபதிகளின் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும் இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்பு நட்புறவு நீண்டகாலமாக நிலவிவரும் நிலையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கான புதிய வழிமுறைகள் மற்றும் இருநாட்டு கடற்படை நடவடிக்கைகளின் நகர்வுகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது. 

அத்துடன்  இருநாட்டு கடற்படை உறவை பலப்படுத்தும் வகையிலான கூட்டு பயிற்ச்சி நடவடிக்கைகள்,  துறைமுக மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள்இவிசேட ரோந்து நகர்வுகள் மற்றும் துறைமுக அழைப்புகள் இருநாட்டு ஒத்துழைப்புடனான ஆசிய பசுபிக் கால் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பன கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.  

மேலும் இந்திய கடற்படை நிர்மாணித்துள்ள ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் இரண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. 

அத்துடன் கோவாவில் அமைந்துள்ள இந்திய கடற்படை பயிற்ச்சி கல்லூரி மற்றும் பயிற்ச்சி முகாமுக்குமான விஜயத்தையும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜய குணரத்ன மேற்கொண்டுள்ளதுடன் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளார். அத்துடன் இலங்கை கடற்படையினர் இந்தியாவில் பயிற்ச்சிகளை மேற்கொள்ளும் நடவடிகைகைகளையும் இந்த சந்திப்பின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.