உயர்நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட நபர் நானல்ல, நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயாராகவுள்ளேன் - சுகாதாரத்துறை அமைச்சர்

Published By: Digital Desk 3

20 Jul, 2023 | 04:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

திருட்டு பொருட்களை கொண்டு வந்து உயர்நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட நபர் நானல்ல, எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெகுவிரைவில் கொண்டு வாருங்கள் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  எதிர்க்கட்சியை நோக்கி குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அமைச்சர் ஒருவரிடம் கேள்வி எழுப்ப முன்னர் அந்த கேள்விகளை உரிய அமைச்சருக்கு அறிவிக்கும் வழக்கம் பாராளுமன்றத்தில் உள்ளது. தற்போது அந்த வழக்கத்தை ஒருசிலர் பின்பற்றுகிறார்களா என்பதை அறிய முடியவில்லை. நான் சபையில் இல்லாத போது எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சுகாதாரத்துறை தொடர்பில் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்கள்.

சுகாதாரத்துறை அமைச்சர் என்ற ரீதியில்  சகல கேள்விகளுக்கும் அறிவியல் ரீதியில் வெகுவிரைவில் முழுமையான அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன்.களுத்துறை போதனா வைத்தியசாலையில்  சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு தேவையான எவிமாகென் தடுப்பூசி இல்லாத காரணத்தால் சிசேரியன் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எவிமாகென் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பில்  களுத்துறை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளக அறிவிப்பு ஊடாக மாகாண சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளார். இரு வாரங்களுக்கு பின்னர் பிரச்சினைகள் தீவிரமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, வியாழக்கிழமை களுத்துறை வைத்தியசாலைக்கு 50 எவிமாகென் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 30,000 தடுப்பூசிகள்  களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, ஒரு அறிவித்தல்களையும், அதனை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர்  உரையாற்றுவது கவலைக்குரியது.

இலவச சுகாதாரத்துறை சேவைக்கு எதிராக திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. மருந்து தட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர். திருட்டு பொருட்கள் கொண்டு வந்து உயர்நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட நபர் நான் அல்ல, ஆகவே நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டு வாருங்கள் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயில் மோதி வேன் விபத்து -...

2025-02-14 13:01:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச...

2025-02-14 12:55:44
news-image

வரக்காபொலயில் லொறி - டிப்பர் வாகனம்...

2025-02-14 12:51:04
news-image

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக்...

2025-02-14 12:50:11
news-image

மீகஸ்வெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-02-14 12:48:22
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46
news-image

கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2025-02-14 12:33:08
news-image

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-02-14 12:24:21
news-image

வவுனியா, கிளிநொச்சி மாவட்டத்துக்கான உலக உணவுத்...

2025-02-14 12:23:16
news-image

நாமல் ராஜபக்ஷவின் சட்டப்படிப்பு குறித்து விசாரணை...

2025-02-14 11:35:50