வவுனியா, நெடுங்கேணி, சின்னடம்பன் வயல் காணியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

நெல் வயலை பார்வையிடுவதற்காக நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வயலுக்குச்சென்றவர் வீடு திரும்பவில்லை என உறவினர்களினால் தேடிச்சென்ற போது இன்று காலை 9.30 மணியளவில் வயல் வரம்பிலிருந்து குறித்த விவசாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா,  நெடுங்கேணி சின்னடம்பனைச் சேர்ந்த  54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முத்துராசா விநாயகமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.


இவருடைய மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.