சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்திட்டது

Published By: Digital Desk 3

20 Jul, 2023 | 02:16 PM
image

பொறுப்பற்ற முறையில் தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்து,சுகாதாரத் துறையை நலிவடையச் செய்து உயிரிழப்புகள் ஏற்படுதலுக்கு காரணமாக அமைதல் என்பனவற்றை காரணமாக் கொண்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (20) ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தது.

அண்மைய காலங்களில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அவற்றைப் பயன்படுத்தியதால் எமது நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்தன.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அறிவுறுத்திய போதிலும், அதைப் பொருட்படுத்தாது அவசர நிலை எனக் கருதி கொள்முதல் மற்றும் பதிவு செயல்முறைக்கு புறம்பாக மருந்துப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதோடு, இதனால் நாட்டின் பல முக்கிய வைத்தியசாலைகளில் உயிரிழப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த உண்மைகளை வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று கைச்சாத்திடப்படுகிறது என்றும், மக்களது வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு வந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேபோல், ஒரு நாட்டின் சுகாதாரம் என்பது மக்களின் வாழ்க்கை என்றும், சுகாதார சீர்கேடு மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைவதற்கு ஒரு காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09
news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2023...

2025-02-19 18:49:32
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 17:43:45
news-image

பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய...

2025-02-19 17:12:43
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக...

2025-02-19 17:34:04
news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08