கைத்தொலைபேசி பாவனை தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளது - கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர்

Published By: Digital Desk 3

20 Jul, 2023 | 11:38 AM
image

கைத்தொலைபேசி பாவனை என்பது தற்போது போதைப்பொருளை விட அதிக ஆபத்தானதாகமாறியுள்ளது என தெரிவித்துள்ள கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர்  எம். எச். எஸ். ஆர். மஜீதியா இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது அதிக அக்கறை செலுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிள்ளைகள் அதிகளவிற்கு கைத்தொலைபேசியை பயன்படுத்துவதால் மனநோயாளர்களாக உலாவித்திரியும் நிலையேற்படும் எனவும் எச்சரித்துள்ள அவர் நாம் அனைவரும் ஒன்றினைத்து சமூகப்பொறுப்புள்ள நற்பிரஜையாக மாற வேண்டும்எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கல்முனை லீனத் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியர்களின் பட்டமளிப்பு விழாவும் வருடாந்த நிகழ்வும் அண்மையில் நடைபெற்ற போது அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

முன்பள்ளிப் பிள்ளைகளின் ஆரம்பம் வீடுகளிலேயே ஆரம்பமாகின்றது. பெற்றோர்கள்   எப்போதும் அதில்  கவனத்திற் கொள்ள வேண்டும். மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து வயதில் குழந்தைகளைச் சேர்த்து விடுகின்றீர்கள். இது ஆபத்தானது. ஐந்து வயதே முன்பள்ளி செல்ல சிறந்தது. பெற்றோர்களாகிய நீங்கள் பிள்ளைகளை முன்பள்ளியில் சேர்த்துவிட்டு உடன் தன் பிள்ளை எழுத வேண்டும் வாசிக்க வேண்டும் என ஆசிரியர்களைக் தொல்லைப்படுத்தாதீர்கள்.

முன்பள்ளிக் கற்றல் என்பது பிள்ளைகளை தரம் ஒன்றிற்கு போக முன் ஆயத்த நிலைப் பயிற்சிகள் செய்வதற்காகதான்.  எனவே, இம் முதற்படிக்கு நாம் என்ன செய்யவேண்டும். பிள்ளைகளுக்கு தசைநார்ப் பயிற்சி உடலியக்கம் திறன் செயற்பாடுகள் வடிவமைக்கப்பட்டு திட்டமிட்ட வழிகாட்டலில் இடம்பெறுகின்றது. பாடுதல்,  ஆடுதல், ஒட்டுதல், வெட்டுதல், கிழித்தல் மணல் மண்ணில் விளையாடுதல்  பறத்தல் இழுத்தல் என பல்வகைப் செயற்பாடுகளூடாகவே பயிற்சிகள் வழங்கப்பட்டு வளர்ச்சியடைந்துவரும் கைகளை பலப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் மேலும், விளையாட்டு மணி அடித்தால் பந்தை அடித்தல் ,சுத்தம் செய்தல், துடைத்தல் பிடித்தல்  போன்ற பல்வேறு செயற்பாடுகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பிள்ளைகள் தரம்  ஒன்றிற்கு தயார்படுத்தும் ஆரம்ப நிலையாகும். அதை விட்டு தனது  பிள்ளை எழுத வேண்டும்.வாசிக்க வேண்டும் என ஆசிரியர்களைக் தொந்தரவு படுத்தாது  பயிற்சிகளை பிள்ளைகள் ஆரோக்கியமாகப் பெற உதவ வேண்டும். எதையும் திணித்து அவசரப்படுத்தினால் தீங்கு தான் பின்விளைவாக அமையும். பிள்ளைகளின் முதிர்ச்சி  பயிற்சி இரண்டும் ஒருங்கிணைந்து உரிய காலத்தில் எழுத வாசிக்கப் பழகும் என்ற நல்ல செய்தியை பெற்றோர் பெற்று செயற்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வாருங்கள்.

அத்துடன் கைத்தொலைபேசி   பாவனை என்பதும் தற்போது  போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளது. அன்றாட ஊடக செய்திகளில் கைத்தொலைபேசி குற்றங்கள் அதிகரிப்பு என்ற செய்தியே இடம்பிடித்துள்ளது. இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்துங்கள். இன்று நாம் வாழும் உலகம் முழுவதும் கைததொலைபேசி  பாவனைக்குள்  உள்வாங்கப்பட்டு விட்டது. 

நாம் எதைச் செய்வதென்றாலும் எம் தேடல் கைத்தொலைபேசியில் தங்கி  உள்ளது. இப் பழக்கம் தற்போது சிறுவர் முதல் முதியோர்வரையும் ஆட்கொண்டு விட்டது. 

இதனால்  அனைவரதும் சிந்திக்கும் ஆற்றல், வாசிப்புத்திறன், புதுமைகள் படைக்கும் திறன் என பல திறன்களை செய்யமுடியாமல் ரோபோக்கள் போல் இயங்குகின்றனர்.

இதனால் நேரம் வீண் விரையமாக்கப்படுகின்றது. ஆன்மீகம் இல்லாமல் போகின்றது. நல்லொழுக்கம் விழுமியம்  குறைவடைகின்றது. கல்வி பாழாகிறது.பண்பாடுகள் மறைகின்றன. அந்நியப் பண்பாடுகள் நிலைபேறாகின்றன. எதிர்காலம் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன் எதையும் சிந்திக்காத மனநோயாளர்களாக உலாவிக் திரியும் நிலைமை தோன்றும்.எனவே தேவைக்கு  கைத்தொலைபேசிகளை பயன்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைத்து சமூகப்பொறுப்புள்ள நற்பிரஜையாக மாற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04