(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை இந்தியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இது அமைந்துள்ளன.
தனது டெல்லி விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தை மையப்படுத்தி 5 முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்திடப்படவுள்ளன.
புதுப்பிக்கதக்க ஆற்றல் சக்தி, இரு நாடுகளுக்கு இடையில் கடலூடான எரிபொருள் குழாய் மற்றும் மின்சார கேபில் இணைப்புகளை ஏற்படுத்தல், திருகோணமலையில் பொருளாதார வலயம், மருந்து பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்தல், பால் உற்பத்தி ஆகியவை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களே இவ்வாறு கைச்சாத்திடப்பட உள்ளன.
கடந்த 10ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார செயலர் வினய் மோகன் குவத்ரா குறித்த 5 ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்ததுடன், இலங்கை - இந்திய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இருதரப்பு பொருளாதாரத உறவுகளை மேம்படுத்தும் வகையிலுமே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் சாதகமான மாற்றத்துக்கான ஒரு புள்ளியாக அமையும் என்றும், இந்தியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பு காத்திருக்கிறது என்றும் வெளிவிவகார செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM