வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவரது அரசாங்க சம்பளப்பணம் மற்றும் அரச வாகனம் என்பவற்றை நிராகரித்து ஏனைய அமைச்சர்களுக்கு முன்மாதிரிான ஒருவராக செயற்படுகின்றார் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நானும் ஒரு  அமைச்சராக செயற்பட்டுவருகின்றேன். நான் அரசாங்க வாகனத்தையும், சம்பளத்தையும் பெற்றுவருகின்றேன். அதே போல் ஏனைய அமைச்சர்களும் அரசாங்கத்தால் தரப்படும் சலுகைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதில்லை. எனினும் சஜித் பிரேமதாச இவ்வாறு செயற்படுவதற்கான காரணம் அவரது தந்தையான ரணசிங்க பிரேமதாசவின் பிரதிபலிப்பே ஆகும்.

இதற்கு முன்னர் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட விமல் வீரவன்ச அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.