ஈராக்கிலுள்ள சுவீடன் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரை

Published By: Sethu

20 Jul, 2023 | 09:35 AM
image

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திலுள்ள சுவீடன் தூதுரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சுவீடனில் புனித குர்ஆன் நூலை எரிக்கும் ஆர்ப்பாட்டமொன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஈராக்கில்  சுவீடன் தூதரகம் இன்று வியாழக்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என சுவீடன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், தூதரகத்தையும் ஊழியர்களையும் பாதுகாப்பது ஈராக்கிய அதிகாரிகளின் பொறுப்பாகும் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

சுவீடன் தூதரகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ஈராக்கிய வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இச்சம்பவத்துக்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணுமாறு பாதுகாப்புப் படையினரை கோரியுள்ளது.

சுவீடனிலுள்ள ஈராக்கிய தூதரகத்துக்கு வெளியே இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்த சுவீடன் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதன்போது புனித குர்ஆன் மற்றும் ஈராக்கிய தேசிய கொடியை எரிப்பத்றகு இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர.; 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்மேற்கு லெபனான் மீது தரைதாக்குதல் -...

2024-10-08 15:24:27
news-image

ஹமாஸ் மீண்டும் பீனிக்ஸ் போல சாம்பலில்...

2024-10-08 12:04:22
news-image

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு: காங்.,...

2024-10-08 11:07:34
news-image

இஸ்ரேலிய தலைநகர் மீது ஹமாஸ் ரொக்கட்...

2024-10-07 16:58:16
news-image

சென்னை விமான சாகச நிகழ்வில் 240...

2024-10-07 12:11:06
news-image

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் வெடிப்புச்...

2024-10-07 10:18:09
news-image

ஹெஸ்புல்லா அமைப்பு ரொக்கட் தாக்குதல்- இஸ்ரேலின்...

2024-10-07 06:27:20
news-image

இஸ்ரேலில் பேருந்து நிலையமொன்றில் துப்பாக்கி சூடு...

2024-10-06 18:54:03
news-image

இஸ்ரேலிய பிரதமர் தனது அரசியல் எதிர்காலத்திற்காக...

2024-10-06 12:45:20
news-image

காஷ்மீர், ஹரியானாவில் காங். கூட்டணிக்கு வாய்ப்பு:...

2024-10-06 10:33:18
news-image

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் :...

2024-10-05 21:40:53
news-image

போர்க்கப்பல்கள் விமானங்கள் மூலம் தாக்குதல் -...

2024-10-05 06:05:01