(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பில் எதிர்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட பெருபாலான திருத்தங்கள் நீதிஅமைச்சரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதனால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு 193 திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ்வினால் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஏற்பாடுகள், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிகள், நியமங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ்வினால் அறிவிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
நாட்டில் அரச மற்றும் தனியார் பிரிவுகள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் ஊடாக இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் , ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) உட்பட பல தரப்பினர் சட்டமூலத்தின் உட்பிரிவுகளுக்குள் உள்ள முக்கிய திருத்தங்களை முன்னிலைப்படுத்தியதால், இந்தச் சட்டமூலம் தொடர்பில் சர்ச்சைகளும் எதிர்ப்புக்களும் ஏற்பட்டன.இது தொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்த ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, ஊழல் தடுப்பு மசோதாவின் உட்பிரிவு 28(3), 161 மற்றும் 119 உட்பட மொத்தம் 37 ஷரத்துகளை சவாலுக்குட்படுத்தியது.
சட்டமூலத்தை சில ஷரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்றும், எனவே திருத்தங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது,
உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படுமாயின், மேற்படி முரண்பாடுகள் இல்லாதொழியும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.
நீதிமன்ற தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சட்டமூலத்தின் 8 (3), 136, 141, 142 மற்றும் 156 ஆகிய பிரிவுகளில் மனுதாரர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுகளை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியமும் அரசியல் கட்சிகளும் பல திருத்தங்களை முன்வைத்தன.
இதனையடுத்த்து கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.எனினும் சட்டமூலம் நிறைவேற்றப்படாது பிறிதொரு தினத்துக்கு விவாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது .
இந்நிலையில் கடந்த ஜூலை 6 ஆம் திகதி மீண்டும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதுடன் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் ஜூலை 19 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் புதன்கிழமை (19) ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் முன்னெடுக்கப்பட்டது .இதன்போது இந்த சட்டமூலம் தொடர்பில் 193 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.இதன்போது எதிர்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட பல திருத்தங்கள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றப்பட்டது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM