விண்வெளிப் பயணங்களால், மனிதர்களுக்கு மரபணு ரீதியான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சிக்காக சென்று ஆராய்ச்சி முடிந்தவுடன் பூமிக்கு திரும்பும் போது, ஆய்வாளர்களின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்ற ஆய்வு மிக நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.

இந்நிலையில் விண்வெளிப் பயணங்களால் மனிதர்களின் மரபணு அளவில், மாற்றம் ஏற்படுகிறது என்பதை சுமார் ஒருவருடத்துக்கு மேல் விண்வெளியிலிருந்த, ஸ்காட் கெல்லி மற்றும் அவரது சகோதரர் மார்க் கெல்லியை கொண்டு நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

கடந்த2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுவரை ஸ்காட் கெல்லி, விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக   சுமார் 340 நாட்கள் வரை தங்கியிருந்தவராவார். 

மேலும் அமெரிக்காவிலுள்ள வீல் கார்னர் பல்கலைக்கழக மரபணு ஆய்வுத்துறை தலைவர் கிறிஸ்டோபர் மேசன், ஆய்வு பற்றி தெரிவித்துள்ளதாவது, விண்வெளிப் பயணம் காரணமாக ஸ்காட் மற்றும் அவரது சகோதரர்  மார்க்கிற்கிடையிலான குரோமோசோம் (chromosome) அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த மாற்றத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. என ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் அன்ட்ரு பீன்பெர்க் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.