வவுனியாவில் இன்று அதிகாலை இரு கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிசாருக்கு கிடைத்த ரகசிய  தகவலையடுத்து  குறித்த நபரின் வீட்டிற்கு சென்ற பொலிசார், இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் வீட்டினை சோதனை செய்த போது கட்டுத்துப்பாக்கியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.