அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுபேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் பதில் சட்டமா அதிபரை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளார்.

டிரம்ப் அமெரிக்காவிற்கு தஞ்சம் கோரி வருகின்ற அகதிகளுக்கு கொண்டு வந்த தடை சட்டத்திற்கு எதிராக வாதிட்டமையால் அவர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமாவினால் அவர் பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.