விவகாரமான விகாரம்; சங்கடத்தில் ஆந்திரப் பிரதேசம்

Published By: Devika

31 Jan, 2017 | 11:25 AM
image

சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கவென உருவாக்கப்பட்ட ‘லோகோ’ ஒன்று ஆந்திர அரசை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் ஏனைய மாநிலங்களைப் போலவே ஆந்திரப் பிரதேசமும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக விசாகப்பட்டினத்தில் இந்த ஆண்டு ஒரு மாநாட்டையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்காக, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அமைப்பையே அடிப்படையாகக் கொண்டு ஒரு லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தான் இப்போது சிக்கல்!

இந்த மாநாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள லோகோ ஒரு ஆண் குறியை ஒத்ததாக இருப்பதாக் கண்ட சமூக வலைதள உறுப்பினர்கள், குறித்த லோகோவை கேலி செய்தும், மாற்றும்படியும் வலியுறுத்தி வருகிறார்கள். 

ஏற்கனவே மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் முதல் பல ஆவணங்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டதால் தற்போது கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறது ஆந்திர அரசு!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்