பலஸ்தீன மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகான உலக நாடுகள் குரல்கொடுக்க வேண்டும் - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கோரிக்கை

19 Jul, 2023 | 09:18 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பலஸ்தீனத்தில் இடம்பெறும் பிரச்சினை பலஸ்தீன நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினையல்ல. மாறாக ஜனநாயகம் மற்றும்  மனிதத்துவ பெறுமானம் தொடர்பான ஒரு பிரச்சினை அதனால் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகான உலக நாடுகள் குரல்கொடுக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18)  இடம்பெற்ற பலஸ்தீன் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மனித வரலாற்றில் மிகவும் துன்பகரமான சூழ்நிலையை நாம் இன்று மத்திய கிழக்கு பிராந்தியத்தில் காண்கிறோம். சொல் வியாக்கியான விளக்கம் போலவே அது துன்பகரமானது. ஏழு தசாப்தங்களுக்கும் அதிக காலப்பகுதியில் இடம்பெறும் இந்த கொடூரமான வன்செயல்களை அதே நிலையில் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இடமளிப்பது எந்தவொரு மனிதரதும் மனட்சாட்சிக்கு ஏற்புடையதொரு விடயமல்ல.

இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருப்பதாக நான் கருதவில்லை. இந்தப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வுகாணும் வகையில் சுயாதீனமான இரு தேசங்களை உருவாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு எடுத்த தீர்மானமானத்துக்கு வரலாறு முழுவதும் இலங்கை பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளதும் ஏகமனதான பூரண ஒத்தாசை கிடைக்கப்பெற்றது.

பலஸ்தீன் மக்களின் சுயாதீனம், சுயஅபிலாசைகள், சுதந்திர உரிமைகள் தொடர்பான திடமான நிலைப்பாட்டைக் கொண்ட இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை அலங்கரித்த அபிமானத்தைப் பெற்ற இரு தலைவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது எனது கடமையென நான் கருதுகின்றேன்.

அவர்கள், பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆகியவர்களாகும். உண்மைக்கு முன் நிற்பதில் எந்தவொரு சலுகைகளை எதிர்பார்த்தோ அல்லது பயமுறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ இந்த தலைவர்கள் தலைசாய்க்கவில்லை.

கடந்தகால தலைவர்கள் அனைவரும் எமக்கு வழங்கிய முன்மாதிரிகள் நாம் செல்ல வேண்டிய சரியான பாதையில் இன்றும் ஒளியூட்டுகிறன என்பதை குறிப்பிட வேண்டும்.

அதேபோல எமது கடந்தகால தலைவர்கள் வேறுபட்ட சிக்கல்மிக்க சூழ்நிலைகளில் எமது வெளிநாட்டு கொள்கைக்கு கௌரவம் சோ்க்கும் வகையில் செயற்பட்ட சந்தர்ப்பங்கள் எனது நினைவில் வருகிறது.

பலஸ்தீன நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினையாக நான் நோக்கவில்லை.

இது ஜனநாயகம் தொடர்பான, இது மனிதத்துவ பெறுமானம் தொடர்பான ஒரு பிரச்சினை. இது நிறவேறுபாடு, இனவேறுபாடு தொடர்பான ஒரு பிரச்சினை. இது சமூக அநீதி தொடர்பான ஒரு பிரச்சினை. இது பலவந்தமாக நாடுகளை கைப்பற்றல் தொடர்பான ஒரு பிரச்சினை. இது ஆக்கிமிப்பு தொடர்பான ஒரு பிரச்சினை. இது புதிய காலணித்துவ உபாயம் தொடர்பான ஒரு பிரச்சினை.

பொதுவாகவே ஐக்கியமயப்பட்டிருந்த மத்தியகிழக்கு அறபுமயமான பிராந்தியம் துண்டாடப்பட்டு யூத, இஸ்லாமிய, கிறிஸ்தவர் என்றும், ஷீஆ – சுன்னி என்றும் பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் அந்த பிராந்திய அரசியல் ஆதிக்கத்தை கையிலெடுத்து ஆயுத வியாபாரம் மற்றும் சுரண்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் ஒரு பிரச்சினையாகும்.

நாளாந்தம் இந்த பூமியில் நடக்கும் மனிதப் படுகொலைகள், வாழிட அபகரிப்பு, செழிப்பான நிலங்களும் நீர் நிலைகளும் கொள்ளையிடப்படல் தொடர்பான ஒரு பிரச்சினையாகும்.

பலஸ்தீன மண்ணின் உண்மையான உரிமையாளர்களின் குடியியல் உரிமைகன் மறுக்கப்பட்டு அவர்கள் மூன்றாம் தரப்பு அடிமைக் குடிகளாக மாற்றப்பட்டுள்ளமை தொடர்பான ஒரு பிரச்சினை.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களை அழித்து பல பரம்பரைகளாக பிள்ளைகளின் கல்வி உரிமைகளையும் எதிர்காலத்தையும் இருள்மயமாக்கல் தொடர்பான ஒரு பிரச்சினை.

அதிகாரத்தின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ள பலஸ்தீன நிலப்பரப்பில், இன்று ஜெனின் பகுதியில் நடப்பது போல, ஆரம்ப குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கும் அகதிகள் முகாம்களுக்கும் நாளாந்தம் இராணுவம் ஊடுருவி எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி சிறு பிள்ளைகளையும் இளையர்களையும், பெண்களையும் அச்சுறுத்தி அவர்களை கைதுசெய்வதன் மூலம் ஏழு தசாப்த காலமாக முன்னெடுக்கப்படும் சித்திரவதைகள் மற்றும் உலகத்தில் பலமிக்க இராணுவ சக்திக்கு எதிராக தாய்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அவர்கள் இதுவரை அபிலாசைகளுடன் தாங்கிக்கொண்டிருக்கும் அபூர்வத்தை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம்.

அதிகாரத்தின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ள நிலப்பரப்பை திறந்த சிறைச்சாலையாக மாற்றி நிலத்தாலும், வான்வழியாகவும் ஏவுகணை தாக்குதல் நடத்தி முன்னெடுக்கும் மனிதப் படுகொலைகள், சொத்துக்கள் அழிப்பு மற்றும் காயப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்க இருக்கும் பாதைகளைக் கூட மறித்து மேற்கொள்ளப்படும் மனிதநேயமற்ற செயற்பாடாகும்.

நாம் இன்று பலஸ்தீன் பூமியில் காண்பது உலக மக்களுக்காக பூகோள நீதியை நிலைநாட்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் வெளிப்படையாகவே சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் ஒரு நிலைமையாகும்.

ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், சர்வதேச நீதிமன்றத்துக்கும் வெறுமனே அறிக்கைகளை சமர்ப்பித்தல் மற்றும் அறிக்கை வெளியிடலுக்கு அப்பால் பூகோள நீதி, மனித உரிமைகள், சர்வதேச சட்டம் தொடர்பான எவ்வித சட்டரீதியான அல்லது நீதிநெறியான பொறுப்புக்களையும் முன்னெடுக்க முடியாது இடையூராக நடந்துகொள்வதை தொடர்ந்தும் நாம் காண்கிறோம்.

யுத்தம் ஏற்படுவதை தடுத்து முரண்பாடுகளை நீக்கி சமாதானத்தையும் நிலையானதன்மையையும் உலகில் ஏற்படுத்தவும் சிறிய நாடுகளுக்கு பொருளாதார நியாயம் கிடைக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச நீதிமன்றம், யுனெஸ்கோ போன்ற அமைப்புக்கள் பல்பங்காளர் அமைப்புக்களுக்கு நியாயமான முறையில் செயற்படுதில் இடைஞ்சலாக அவற்றைப் பலவீனப்படுத்தும் செயற்பாட்டை நாம் காண்கிறோம்.

இஸ்ரேலின் வேண்டுதலுக்கமைய ஜெரூஸலத்தை தலைநகராக அங்கீகரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீர்மானித்தவேளை அதற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்த நிலையிலும் அமொிக்காவின் வீட்டோ அதிகாரத்தில் அது செயலற்றுப்போனது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை  திறப்பு

2024-09-20 15:43:11
news-image

பண்டாரகமை - களுத்துறை வீதியில் விபத்து...

2024-09-20 15:11:24
news-image

யாழில் பால் புரைக்கேறியதில் 12 நாட்களே...

2024-09-20 14:35:23
news-image

குருநாகல் மாவட்டத்தில் 977 வாக்களிப்பு நிலையங்களுக்கும்...

2024-09-20 14:18:43
news-image

புத்தளத்தில் பீடி இலை பொதிகள் கண்டுபிடிப்பு

2024-09-20 13:56:51
news-image

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை...

2024-09-20 13:46:29
news-image

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் கள ஆய்வு

2024-09-20 13:34:43
news-image

தலவாக்கலையில் மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

2024-09-20 15:13:33
news-image

நாமலின் குடும்ப உறவினர்கள் துபாய்க்கு பயணம்

2024-09-20 13:34:28
news-image

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை...

2024-09-20 13:19:49
news-image

145 வாக்காளர் அட்டைகளை  விநியோகிக்காமல் வைத்திருந்த...

2024-09-20 12:58:18
news-image

மொனராகலை சிறுவர் காப்பகத்தில் இரு சிறுமிகள்...

2024-09-20 12:55:55