வாழைச்சேனையில் தனியார் வாகனத் தரிப்பிடத்தில் தீ : 40 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை

Published By: Vishnu

18 Jul, 2023 | 09:27 PM
image

வாழைச்சேனை கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகனத் தரிப்பிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவமொன்றின் போது மோட்டர் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட 40 ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது முச்சக்கரவண்டி-1,மோட்டார் சைக்கிள்கள் -34, துவிச்சக்கரவண்டி- 8, என 40 வரையிலான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களில் தீ பரவியதால் வெடிச்சத்தம் கேட்டதுடன் புகையுடன் கூடிய இருள் சூழ்ந்த நிலையில் தீ பரவல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலர் அச்சமடைந்து ஓடியதுடன் நிலவரம் அறிந்து பொதுமக்கள் தீயினை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் பணியாளர்கள், மாணவர்கள் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு பஸ்சில் பயணங்களை மேற்கொள்வது வழக்கமாகும். 

திடீரென ஏற்பட்ட இந்த தீ பரவல் சம்பவத்திற்கு காரணம் இது வரை கண்டயறிப்படவில்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர். 

இதில் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் தீயில் அகப்பட்டு சாம்பலாகியுள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.

வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை அடையாளம் கண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் மற்றும் கிரமாசேவகர்அ.பிரபு ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை அவதானித்தார்.

மின்சார சபையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட தீ பரவலா என ஆய்வு செய்ததுடன் சம்பவ இடத்தில் பாதுகாப்பு கருதி மின் துண்டிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர், குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:10:00
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39