(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள அழிவுக்கு சுகாதார அமைச்சர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (18) மதியம் முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த உண்ணாவிரதத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை இவர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க முயன்ற போது பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த இலஞ்சம், ஊழல், வீண் விரையத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார கூறுகையில்,
நாட்டு மக்கள் உயிரிழப்பது இவர்களுக்கு தெரியவில்லை. அதற்காக நாம் குரல் கொடுக்கும் போது பொலிஸார் தலையிட்டு சண்டித்தனம் காட்டுகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரப்பிரச்சினையால் வெளியேறினார்.
சுகாதார பிரச்சினையால் உங்களுக்கு செல்ல வேண்டி ஏற்படும். இதனை ஜனாதிபதிக்கு கூறிக்கொள்கிறோம். சுகாதார அமைச்சர் பதவி விலக வில்லை என்றால் ஜனாதிபதி அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும். நீங்கள் நீக்கவில்லை என்றால் அவர் வீடு செல்வதற்கான ஆரம்ப கட்டமாக இது அமையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM