மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரிகள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்துகொள்ள முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

மலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். அதற்கான விண்ணப்பம் மருத்துவர்கள் சபையால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த மாணவி இது தொடர்பில் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மேன்முறையீட்டு மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போதே மேற்கண்டவாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, மாலபே தனியார் மருத்துவமனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.