(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா உட்பட வல்லரச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருகின்றன. இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக குரல் கொடுக்கும் அமெரிக்க தூதரகம் பலஸ்தீனில் இஸ்ரேல் அரசாங்கம் முன்னெடுக்கும் களுக்கு ஆதரவளித்து உதவி வருகின்றது.
அதனால் இவ்வாறான இரட்டை நிலைப்பாட்டை வல்லரச நாடுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பலஸ்தீன் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பலஸ்தீனில் அகதிமுகாம் ஒன்றின் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தொடர்ந்து இரண்டு தினங்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த முகாம் முற்றாக சேதமடைந்து 12பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு தினங்களில் இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை வெளிப்படுத்தவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியிடம் இந்த சபையில் கேட்டுக்கொண்டிருந்தேன்.
குறைந்த பட்சம் கவலையையாவது தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன். இது தொடர்பாக கண்டனத்தை வெளியிடுவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை அது தொடர்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அப்படியானால் எங்களது மனம் எங்கே இருக்கிறது.
நாங்கள் பலஸ்தீனியர்களின் நண்பர்கள் என்கிறோம். இலங்கை, பலஸ்தீன் நட்புரவுச்சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறோம். ஆனால் ஏன் இந்த தாக்குதல் தொடர்பில் மெளனமாக இருக்கிறது என்பதுதான் புரியாமல் இருக்கிறது.
மேலும் பலஸ்தீன் மக்கள் பல தசாப்பத காலமாக கொன்றுக்குவிக்கப்படுவதாக எம்.எஸ்.டி. இன்டர்நெஷ்னல் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார். சித்தரவதைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.அவர்களின் அடிப்படை உரிமைகள், மனிதாபிமான உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் தொடர்பாக குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவுக்கு எமது ஜெனிவாவுக்கான வதிவிட பிரதிநிதி பாலித்த கோஹன மற்றும் கலாநிதி ஜயான் ஜயதிலக்க ஆகியோர் இந்த குழுவுக்கு தலைமை தாங்கி இருக்கிறது.
இந்த குழு இஸ்ரேலின் யுத்தக்குற்றங்கள் பலஸ்தீன் எல்லையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. ஆனால் இஸ்ரேல் அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்தது.
அதேபோன்று 2021 ஒக்டோபர் 21இல் ஐக்கிய நாடுகள் பாெதுச்சபை கூட்டத்தில் இஸ்ரேலின் தாக்குதலை முற்றாக நிறுத்துமாறு அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதில் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதேநேரம் ஐக்கிய அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் இஸ்ரேலுக்கு தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் முன்னெடுத்து வருகின்றன. இதனால் பலஸ்தீன் மக்கள் பாரிய துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எமது நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இங்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். காணி உரிமை, காணாமல் போனவர்களின் விடுதலை, மனித புதைக்குழி, உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சமூகத்துக்காக அவர்கள் மேற்கொள்ளும் இந்த விடயங்களை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோன்று பலஸ்தீன் மக்களும் கஷ்டப்படுகின்றனர்.
அவர்களின் மனித உரிமை மீறப்படுகிறது. ஏன் அவர்களுக்காக நடவடிக்கை எடுக்க தவறுகின்றது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என கேட்கிறோம்.
அதேபோன்று பலஸ்தீனில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடவடிக்கை எடுக்கும்போது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை நிராகரிக்கின்றனர். வல்லரச நாடுகளின் நிலைப்பாடு என்ன என கேட்கிறோம். அதனால் தயவு செய்து இந்த கொடுமைகளை வல்லரச நாடுகள் நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM