(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு தற்போது வங்குரோத்து அடைந்துள்ளது.
தெரிவுக்குழுவின் தலைவர் பதவியை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவது பாராளுமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய பாராளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்திட்டு வலியுறுத்தினோம்.
தெரிவுக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.
எமது கோரிக்கைக்கு அமைய நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய தெரிவுக்கு நியமிக்கப்பட்டது.
ஆனால் தெரிவுக்குழுவின் தலைவர் பதவி வங்குரோத்துக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழு நியமனத்தில் நேர்ந்துள்ள தவறை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு சபாநாயகருக்கு உண்டு.
பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வங்குரோத்து தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு தற்போது வங்குரோத்து அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த தெரிவுக்குழுவை புறக்கணித்துள்ளனர்.
நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவில் தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் அதனை விடுத்து தலைவர் பதவியை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவது பாராளுமன்றத்தை அவமதிப்பாக கருதப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM