உண்மையை மறைக்க வேண்டுமாயின் தலைவர் பதவியை  ஆளும் தரப்புக்கு வழங்குங்கள் - பாராளுமன்றத்தில் அனுரகுமார திஸாநாயக்க

Published By: Vishnu

18 Jul, 2023 | 03:50 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நிதி வங்குரோத்து நிலை தெரிவுக்குழு  நடுநிலையுடன், உண்மையுடன் செயற்பட வேண்டுமாயின்  தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குங்கள் அல்லது.உண்மையை மறைத்து பொறுப்புக்கூற வேண்டியவர்களை பாதுகாக்க வேண்டுமாயின் தலைவர் பதவியை ஆளும் தரப்புக்கு வழங்குங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். இந்த அரசாங்கம் பொதுஜன பெரமுன என்ற கட்சியை  அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்  தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில்  நிதி அமைச்சராக  பதவி வகித்த பஷில் ராஜபக்ஷ  பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக  பதவி வகிக்கிறார். கட்சியின் தலைமைப் பதவியில் அப்போது ஜனாதிபதியாக இருந்தவரின் சகோதரர் ஆகும். இதனால் வங்குரோத்து நிலைமை தொடர்பில் உண்மையை அறிய வேண்டுமென்றால் இதற்கு காரணம் என்று கூறப்படும் தரப்பில் இருந்தே குழுவில் தலைவர் நியமிக்கப்படுவது நியாயமற்றது.

நிதி வங்குரோத்து தொடர்பில் உண்மையில் ,நடுநிலையான விசாரணை முன்னெடுக்கப்பட  வேண்டுமாயின் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியையும் உறுப்பினர்களில் பெரும்பானவர்களும்  எதிர்க்கட்சியில் இருந்தே நியமிக்கப்பட வேண்டும். ஏற்கனவே நீதிமன்றத்தில் பொருளாதார நெருக்கடி தொடர்பாக வழக்கு விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த வழக்கிற்கு இணையாக பாராளுமன்றத்தில் விசேட  தெரிவுக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் இந்த தெரிவுக்குழு குறித்த வழக்கின் குற்றவாளிகளுக்கு பதிலாக வேறு நபர்களை குற்றவாளிகளாக காட்டி அறிக்கையை வெளியிடலாம்.

இது நியாயமற்றது. இந்த பாராளுமன்றத்தில் ஏதேனும் அதிகாரம் தொடர்பில் நம்பிக்கை இருக்குமாக இருந்தாலோ, நடந்துள்ள விடயம் தொடர்பில் உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் இதனை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03