தற்போதைய அரசாங்கத்தை இன்னும் 20 வருடங்களுக்கு யாராலும் வீழ்த்த முடியாது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி - கலஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை விரைவில் வீழ்த்துவோம் என கூட்டு எதிரணி தெரிவித்து வருகின்றமைக்கு பதிலளிக்கும் வகையில் இவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.