கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்கக்கட்டிகளை   இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இரண்டு சந்தேக நபர்களை சுங்கப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இருவரும் தங்கக்கட்டிகளை நாக்குக்குள் மறைத்து வைத்த நிலையில், இந்தியாவுக்கு கொண்டுச்செல்ல முற்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் என தெரிவித்த சுங்கப்பிரிவினர், குறித்த இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.