முறைப்பாடு ஒன்று தொடர்பில் இங்கிரிய பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து நேற்றிரவு (17) இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
42 வயதுடைய வஜிரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளருடன் சில ஆவணங்கள் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது அவர் வர்த்தகரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பில் வர்த்தகர் இங்கிரிய பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அவர் வரவழைக்கப்பட்டு, எதிர்காலத்தில் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM