நம்பிக்கையில்லா பிரேரணை சுகாதார அமைச்சருக்கா ? அல்லது அரசாங்கத்திற்கா? என்பதை இன்று அறிவிப்போம் - ஐக்கிய மக்கள் சக்தி

18 Jul, 2023 | 10:55 AM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதாரத்துறைக்கு ஏற்பட்டுள்ள அழிவுக்கு சுகாதார அமைச்சர் மாத்திரமின்றி முழு அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும். எனவே சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதா அல்லது முழு அரசாங்கத்துக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதா என்பது தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை (18) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் உயிரிழப்பதற்காக காரணம் என்ன என்பது குறித்து வைத்தியர்களுக்கு கூட புரியாத நிலைமையே காணப்படுகிறது.

சுகாதார அமைச்சர் உட்பட முழு அரசாங்கத்தையும் மக்கள் நீதிமன்றத்துக்கு அழைப்பதற்கு நாம் தயார். நாட்டு மக்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

இன்று ஏதேனும் நோய் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். உலகத்தின் மத்தியில் இலங்கையின் சுகாதாரத்துறை தொடர்பில் காணப்பட்ட நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த தோல்வியடைந்த முழு அரசாங்கத்தையும் உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றோம்.

தேர்தலுக்கு பயந்து கொண்டிருக்காமல் , பாராளுமன்றத்தையும் கலைத்து மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் , அரசாங்கத்தினாலேயே பாவனையிலிருந்தும் நீக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே மக்கள் நம்பிக்கையிழந்து அச்சப்படுகின்றனர்.

தற்போது பாராளுமன்றத்தில் எமக்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அனைவரும் அறிவர். எவ்வாறிருப்பினும் இதனை எண்ணி எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காது , எம்மால் இயன்றவரை அரசாங்கத்தை தோல்வியடைய செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

எவ்வாறிருப்பினும் சுகாதார அமைச்சருக்கு எதிராக மாத்திரம் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதா அல்லது அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதா என்பது குறித்து தற்போது கலந்தாலோசித்து வருகின்றோம். நாளை (இன்று) அது தொடர்பில் அறிவிப்போம்.

எனினும் இதன் வெற்றியை தனித்து எம்மால் தீர்மானிக்க முடியாது. அரசாங்கத்திலுள்ள முற்போக்கான உறுப்பினர்களுடனும் , ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

2025-01-18 15:34:10
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 14:32:18
news-image

இன்று 12 ரயில் சேவைகள் இரத்து

2025-01-18 15:01:11
news-image

2025ல் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின்...

2025-01-18 14:51:16
news-image

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித்...

2025-01-18 14:20:16
news-image

மாத்தளையில் தனியார் நிறுவனம் ஒன்றில் தீ...

2025-01-18 14:03:58
news-image

ஹட்டன் இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின்...

2025-01-18 13:48:33
news-image

அம்பாறை - மருதமுனை பகுதியில் ஐஸ்...

2025-01-18 13:44:26
news-image

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-01-18 12:33:20
news-image

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர்...

2025-01-18 12:44:08
news-image

சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் -...

2025-01-18 13:18:48
news-image

வவுணதீவு வயல்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...

2025-01-18 13:43:59