சீன உரம் : விசாரணைகளை துரிதப்படுத்த விசேட குழு - தண்டனை வழங்குவதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்கிறார் அமரவீர

18 Jul, 2023 | 10:41 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன உரக்கப்பல் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

அந்தக் குழுவினால் வெளிப்படுத்தப்படும் தகவல்களுக்கமைய , இவ்விடயத்தில் தவறிழைத்துள்ளவர்களுக்கு தண்டனை வழங்குவதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சீன நிறுவனமொன்றிடம் உரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முற்பதிவு செய்யப்பட்டு , பின்னர் அந்த உரம் தரக்குறைவானதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டு அதனை திருப்பி அனுப்பியமையால் குறித்த உரத்தை ஏற்றி வந்த கப்பல் நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய நிலைமை இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.

இது தொடர்பில் திங்கட்கிழமை (17) ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சீன உரக்கப்பல் விவகாரத்தில் எந்தவொரு விடயத்தையும் மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. இது தொடர்பில் கணக்காய்வு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் வழக்கு தாக்கல் செய்யுமாறு எமக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரது பெயரைப் பரிந்துரைக்குமாறு நீதி அமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதற்கமைய ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து , உயர் அதிகாரிகளை உள்ளடக்கி விசேட குழுவொன்று நியமிக்கப்படும்.

அந்தக் குழுவினால் வழங்கப்படும் தகவல்களுக்கமைய தவறிழைத்தவர்கள் காணப்பட்டால் , அவர்களுக்கு  தண்டனை வழங்குவதிலிருந்து பின்வாங்க மாட்டோம்.

இதற்கு மேலதிகமாக பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சீனாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் , அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இராஜதந்திர மட்டத்தில் இவ்விடயத்தை அணுகுமாறு வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய திருப்பி அனுப்பப்பட்ட உரத்துக்காக வேறு உரத்தைப் பெற்றுக் கொள்ளவதா அல்லது பணத்தைப் பெற்றுக் கொள்ளவதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

அதிகாரத்தை கைப்பற்ற எண்ணும் சில குழுக்கள் இன்று சீன அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த நிறுவனம் இங்கிலாந்துக்கும் உரத்தை இறக்குமதி செய்து வருகிறது. எனவே இந்த நிறுவனத்திடமிருந்து பெறும் சகல வகையான உரமும் அழுக்கானதெனக் கூற முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45