எம்முடைய இல்லத்தரசிகள் தங்களது இடது கையில் உள்ள சுண்டு விரலில் வெள்ளியினாலான மோதிரத்தை அணிந்தால், தன வரவு உண்டாகும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் எம்மில் சிலருக்கு வெள்ளி எனும் உலோகம் குறித்த சந்தேகங்கள் இருக்கிறது. குறிப்பாக நவரத்தின கல் மற்றும் ஜெம்ஸ் எனப்படும் பரிகார கற்கள் அணிவதற்கு வெள்ளி எனும் உலகம் தான் சிறந்தது என கூறுகிறார்களே ஏன்? இதைத் தவிர்த்து எம்முடைய முன்னோர்கள் வெள்ளியினாலான பொருட்களுக்கு புனிதத் தன்மை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்களே ஏன்? என்ற சந்தேகமும் இருக்கிறது.
வேத ஜோதிடத்தின் அடிப்படையில் வெள்ளி என்பது வியாழ பகவானையும், சந்திர பகவானையும் குறிக்கிறது. எம்முடைய உடலில் ஐம்பெரும் பூதங்களாகிய நீர் மற்றும் கபம் ஆகிய இரண்டையும் வெள்ளி சமநிலைப்படுத்துகிறது.
வேத சாஸ்திரங்களிலும் வெள்ளி எனும் உலோகத்தை அணிந்திருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமும், பேரழகும், செல்வ வளமும், மகிழ்ச்சியும் இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது.
உங்களுக்கு குரு தோஷம் அல்லது குரு பகவானால் தோஷம் ஏற்பட்டிருந்தாலும் அல்லது சந்திர பகவானால் தோஷம் ஏற்பட்டிருந்தாலும் அல்லது குரு மற்றும் சந்திரன் பரிபூரண அருளைப் பெற வேண்டும் என்றாலும்... வெள்ளி ஒன்றுதான் சிறந்த வழி.
இதனை ஆபரணமாக அதாவது மோதிரமாகவோ.. செயினாகவோ.. பிரேஸ்லெட்டாகவோ அல்லது வேறு வகையிலான ஆபரணமாக அணிந்தால், அவை உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆரோக்கியம் நீடித்திருந்தால்… அதனூடாக சுறுசுறுப்பு, மகிழ்ச்சியும் உண்டாகி சந்தோசத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பெண்கள் தங்களது இடது கையில் உள்ள சுண்டு விரலில் வெள்ளி மோதிரத்தை அணிய வேண்டும் என முன்னோர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். இது ஆரோக்கியத்தை தருவதுடன் மட்டுமல்லாமல் தன வரவையும் ஏற்படுத்துவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மேலும் வெள்ளியினாலான பொருட்களை சாப்பிடும் தட்டு, பூஜையறை பொருட்கள், தண்ணீர் அருந்தும் கோப்பை… என பல பொருட்கள்- எம்முடைய இல்லங்களில் வெள்ளியினாலான பொருட்களாக இருந்தால்- வெள்ளி மூலமாக பரவும் நேர் நிலையான அதிர்வலைகள் எம்முடைய குடும்பத்து உறுப்பினர்களிடத்தில் பரவி, அவர்களிடத்தில் எண்ணங்களை மேம்படுத்துகின்றன. இதன் காரணமாகவும் எம்முடைய இல்லங்களில் வெள்ளியினாலான பொருட்களை வாங்கி சேகரிக்க வேண்டும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM