ராஜபக்ஷர்களை தூய்மைப்படுத்தும் சாகர தலைமையிலான தெரிவுக்குழுவை புறக்கணிப்போம் - மக்கள் விடுதலை முன்னணி

Published By: Vishnu

17 Jul, 2023 | 08:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதாரப் பாதிப்புக்கு கப்ரால்,பஷில்,மஹிந்த ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு அமைத்துள்ளமை வழக்கு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ராஜபக்ஷர்களை தூய்மைப்படுத்தும் தெரிவுக்குழுவில் நாங்கள் கலந்துக் கொள்ள போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க  தெரிவித்தார்.

கண்டி பகுதியில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு ஏன் வங்குரோத்து நிலை அடைந்தது, அதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.வங்குரோத்து நிலை இயற்கையாகவே தோற்றம் பெற்றது என்பதை காண்பிப்பதற்காக நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய பாராளுமன்றத்தில் சாகர காரியவசம் தலைமையில் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. இவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழு நடுநிலையாக உண்மையுடன் செயற்படுமா என்பது சந்தேகத்துக்குரியது.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்,முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ,முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ராஜபக்ஷர்களை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் சாகர காரியவசம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு பயனற்றது,ஆகவே மக்கள் விடுதலை முன்னணி இந்த பயனற்ற செயற்பாட்டில் பங்குகொள்ளாது.நாங்கள் தெரிவுக்குழுவை புறக்கணிப்போம்.தேர்தலை நடத்தினால் மக்கள் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பு வழங்குவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை முக்கியமான...

2025-01-26 13:38:14
news-image

மஹியங்கனை - கண்டி வீதியில் லொறி...

2025-01-26 12:12:23
news-image

கனடா பல்கலைக்கழக ஆய்வாளர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன்...

2025-01-26 12:29:59
news-image

சிலாபத்தில் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

2025-01-26 12:53:46
news-image

யாழ். செல்கிறார் ஜனாதிபதி அநுர

2025-01-26 12:32:28
news-image

அதானியின் காற்றாலை திட்டம் இரத்தாகாது ;...

2025-01-26 13:28:54
news-image

வாரியபொல பகுதியில் நீரில் மூழ்கிய இரு...

2025-01-26 11:24:26
news-image

இலங்கை வர ஆய்வுக் கப்பல்களுக்கு தடையில்லை;...

2025-01-26 12:58:44
news-image

வாழைச்சேனையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவர்...

2025-01-26 12:41:41
news-image

யோசித்த ராஜபக்ஷவை மகிந்தவின் மகன் என்பதற்காக...

2025-01-26 10:58:29
news-image

காலி இமதுவ பகுதியில் மூன்று பஸ்கள்...

2025-01-26 13:15:53
news-image

பெப்ரவரி 10 எமிரேட்ஸ் செல்கிறார் ஜனாதிபதி

2025-01-26 11:15:14