ஆசிய விளையாட்டு விழாவில் இந்திய கால்பந்தாட்ட அணி பங்குபற்ற அனுமதிக்குமாறு மோடிக்கு பயிற்றுநர் கடிதம்

Published By: Sethu

17 Jul, 2023 | 05:46 PM
image

இவ்வருடம் சீனாவில் நடைபெறவுள்ள  ஆசிய விளையாட்டு விழாவில் இந்திய கால்பந்தாட்ட அணி பங்குபற்ற அனுமதிக்குமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அணியின் பயிற்றுநர் ஈகோர் ஸ்டிமெக் கடிதம் எழுதியுள்ளார். 

எந்தவொரு விளையாட்டிலும் தரவரிசையில் இந்திய அணி ஆசியாவின் முதல் 8 இடங்களுக்குள் இருந்தால் மாத்திரமே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குறித்த அணி பங்குபற்றுவதற்கு இந்திய அரசினால் அனுமதி வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது இந்தியாவின் ஆண்கள் கால்பந்தாட்ட அணி ஆசிய கண்டத்து நாடுகளின் தரவரிசையில் 17 ஆவது இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியாவும் அங்கம் வகிக்கும் ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தில் இந்தியா 18 ஆவது இடத்தில் உள்ளது.

இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணி ஆசிய நாடுகளில் 10 ஆவது இடத்தில் உள்ளது. 

இதனால் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சின் அறிவுறுத்தலின்படி, இவ்விரு அணிகளும் எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற முடியாது.

இந்நிலையில், இந்திய கால்பந்தாட்ட அணி தொடர்பில் மேற்படித் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு இந்திய  கால்பந்தாட்டச் சம்மேளனம் கோரவுள்ளதாக அச்சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஷஜி பிரபாகரன்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்விடயத்தில் தலையிட்டு, ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்ற இந்திய அணிக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய தேசிய அணியின் பயிற்றுநரான குரோஷியா நாட்டைச் சேர்ந்த ஈகோர் ஸ்டிமெக் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது. 

ஆசிய விளையாட்டு விழா செப்டெம்பர் 23 முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதிவரை சீனாவின் ஹாங்ஸோவ் நகரில் நடைபெறவுள்ளது. கால்பந்தாட்டப் போட்டிகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ...

2024-02-23 22:25:16
news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53