அம்பாறை , உஹன பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

கெப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்து மின் கம்பத்தில் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்பாறை பிரதேசத்தை சேர்ந்தவர்களே குறித்த விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.